குடும்பமா அழைத்து வந்து கொடுப்பது தான் ‘சர்ப்ரைஸா’? சூப்பர் சிங்கர் சாரா சுருதி கொடுத்த பதிலடி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். பல ஆண்டுகாலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் பாட வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலமாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார்கள். கடைசியாக சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 சூப்பர் நடந்தது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10:
சமீபத்தில் தான் இந்த சீசன் உடைய கிராண்ட் பினாலே நடைபெற்றது. இதில் காயத்ரி என்பவர் தான் டைட்டில் பட்டதை வென்றிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்காக போட்டியாளர்களுக்கு பிடித்த விஷயங்களை சப்ரைஸ் செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், இதை நெட்டிசன்கள் பொய் என்றும், மக்களை நம்ப வைப்பதற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றெல்லாம் விமர்சித்து இருக்கிறார்கள்.
சாரா சுருதி பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 போட்டியாளர் சாரா சுருதி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நான் போட்டியாளராக இருக்கும் போது என்னுடைய அப்பாவை அழைத்துக் கொண்டு வந்து எனக்கு சப்ரைஸ் கொடுத்தார்கள். அது நான் எதிர்பார்க்கவே இல்லை. காரணம், என்னுடைய அப்பா வெளியூரில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்பாவை பார்த்தே ரொம்ப வருடம் ஆகிவிட்டது. என்னுடைய நிகழ்ச்சியை அப்பா டிவியில் தான் பார்ப்பார்.
https://www.youtube.com/watch?v=2cjgAQDkp1w
நிகழ்ச்சியில் செய்தது:
என்னுடைய அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இரண்டு குடும்பத்தினருமே அவர்களை ஒதுக்கி விட்டார்கள். அதனால் எங்களுக்கு எந்த சொந்த பந்தம் எதுவும் பெரிதாக கிடையாது. அதனால் என்னுடைய அப்பா, அம்மா மீது தான் அதிகமான பாசம் வைத்திருக்கிறார். ஆனால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்னுடைய அப்பா வந்தது எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சி தான். என்னுடைய அப்பாவை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து தொடர்பு கொண்டு அவரை ஊருக்கு வரவழைத்து இருக்கிறார்கள். நாங்கள் மாடியில் இருக்கிறோம். அந்த வீட்டின் கீழ் பகுதியில் தான் என்னுடைய அப்பாவை தங்க வைத்திருக்கிறார்கள்.
சர்ச்சைகளுக்கு பதிலடி:
எங்கள் குடும்பத்தில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய அப்பா வந்தது உண்மையிலேயே எனக்கு தெரியாது. செட்டில் தான் அப்பாவை பார்த்தேன். ஆனால், ஒரே வீட்டில் இருந்து கொண்டு வந்து தான் நிகழ்ச்சிக்கு வர வைத்தார்கள். எதற்காக இப்படி டிஆர்பி ரேட்டிங்காக செய்கிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே என்னுடைய அப்பா வந்தது எனக்கு தெரியாது. நிகழ்ச்சியில் எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது உண்மைதான் என்று கூறியிருக்கிறார்.