எங்களுக்கும் இத்தனை லட்சம் வரி கட்ட சொன்னாங்க, ஆனா நாங்க - சூப்பர் சிங்கர் வீடு குறித்து செந்தில் கணேஷ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள். சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட, மழலை குரல்கள் ஒலிக்கும் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியை மாகா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:
இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். மேலும், இந்த சூப்பர் சிங்கர் சீனியர் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானவர் அருணா. எட்டு சீசன்களாக ஆண்கள் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனார்கள். ஆனால், ஒன்பதாவது சீசனில் தான் ஒரு பெண் வெற்றி பெற்றார். அருணாவுக்கு பரிசாக வீடு கொடுத்திருந்தார்கள்.
அருணா பேட்டி:
இதை அடுத்து சமீபத்தில் அடித்த பேட்டியில் அருணா, ஒரு வருடம் கடந்துமே நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கொடுத்த என்னுடைய வீட்டிற்கு போகவில்லை. எனக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பரிசாக 50 லட்சத்திற்கும் மேல மதிப்புள்ள ஒரு வீடு தந்தார்கள். அதற்கு நாங்களுமே லட்சக்கணக்கில் வரி கட்ட வேண்டி இருந்தது. ஆனால், எங்கள் குடும்பத்தின் சூழ்நிலையால் என்னால் அந்த பணத்தை முழுசாக கட்ட முடியவில்லை.
பரிசு வீடு பற்றி சொன்னது:
இப்ப வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தவணை முறையில் தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் மொத்த பணத்தையும் கட்டி முடித்து அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்து விடுவோம். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுவதற்கு அனுமதியும் வாங்கி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். அருணா பரிசாக வென்ற 60 லட்சம் மதிப்புள்ள அந்த வீட்டிற்கு சுமார் 15 லட்சத்திற்கும் மேல் வரி கட்ட வேண்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் கணேஷ் பேட்டி:
இந்த நிலையில் இது தொடர்பாக சூப்பர் சிங்கர் பிரபலம் செந்தில் கணேஷ், அருணா பேசியது நானுமே பார்த்தேன். விஜய் டிவி நிகழ்ச்சியை பொருத்தவரை பரிசாக அறிவித்த காசையோ, பணத்தையோ சரியாக தந்து விடுவார்கள். அந்த பரிமாற்றத்தில் சிலர் விஷயங்கள் இருக்கும் பட்சத்தில் அது நம் கைக்கு கிடைக்க கொஞ்சம் முன்ன பின்ன ஆகும். ஐம்பது லட்சம் மதிப்புள்ள வீடு தருவதாக சொன்னார்கள். ஆனால், வரியாக 15 லட்சம் வரை கட்ட வேண்டி வந்தது. இன்னொரு ஆப்ஷன் ஆக 15 லட்சத்தை கழித்துவிட்டு 35 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்கிக்க கேட்டார்கள். நாங்க சரி என்று அப்படியே வாங்கி விட்டோம் என்று கூறியிருந்தார்.