பாடகரா தான தெரியும் துபாய் இப்படி ஒரு டான்ஸ்ஸர்னு தெரியாது இல்ல - ரசிகர்களை அசர வைத்த பென்னி தயாள்.

By Rajkumar · 10/7/2023

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் "மதுரைக்கு போகாதடி" பல்லே லக்கா" போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடகர் பென்னி தயாள்.இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான மாயா மாயா என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பென்னி. இதனை தொடர்ந்து இவர் ஏ ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடி இருக்கிறார். பின் இவர் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பாடி இருக்கிறார்.

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் பாடியிருக்கிறார்.பின் இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

பல ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது ஒன்பதாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. பென்னி கடைசியாக “தி லெஜெண்ட்” திரைப்படத்தின் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “வாடி வாசல்” என்ற பாடலை பாடியிருந்தார். சூப்பர் சிங்கரின் கடந்த சீசன் போது இவர் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

View this post on Instagram

A post shared by BENNY DAYAL (@bennydayalofficial)

இதனால் "இனி நான் சூப்பர் சிங்கர் 8 தொடர்பாக எதையும் பதிவிட மாட்டேன். என்னால் அத்தனை வெறுப்பைக் கக்கும் செய்திகளைத் தாங்க முடியவில்லை. நீங்கள் இதுவரை காட்டிய அத்தனை அன்புக்கும் நன்றி. நானும் ஒரு மனிதன் தான். போதும். நன்றி. நிகழ்ச்சியின் அடுத்த சீஸனில் உங்களைப் பார்க்க மாட்டேன்" என்று கூறி இருந்தார். ஆனால், அடுத்த சீசனில் மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு திரும்பி இருந்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பென்னி தயால் அடிக்கடிஏதாவது பாடல் பாடி பதிவுகளை போடுவது வழக்கம். இப்படி ஒரு நிலையில் இவர் பரதநாட்டியம் ஆடி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நீங்கள் நன்றாக பாடுவீர்கள் என்று தெரியும். ஆனால், இப்படி ஆடிவீர்கள் என்பது தெரியாதே என்று வியந்து போனார்கள். அதில் ஒரு ரசிகர் பென்னி தயாளை ஒரு பின்னணி பாடகராக இந்த உலகத்திற்கு தெரியும் முன்னர் அவர் அபுதாபி இந்தியன் ஸ்கூலில் ஒரு கிளாசிக்கல் டான்ஸர் என்பது நம்மில் சில பேருக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். இதற்கு பென் தயாளும் ஹார்ட் விட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full