தொகுப்பாளர்கள் என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. டிடி, கோபிநாத், ஜெகன், மாகாபா, பிரியங்கா என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் திவ்யா. திவ்யா அவர்கள் முதலில் வி.ஜே.வாக தான் அறிமுகமானார். சோசியல் மீடியாவில் மிகப் பிரபலமான வி.ஜே.வாக திவ்யா மக்கள் மத்தியில் பேசப்பட்டார். அதோடு பத்து வருடங்களாக இவர் மீடியா துறையில் தான் பயணித்தார்.

பின்னர் பிரபலமான தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணி ஆற்றி உள்ளார்.பின்னர் மலையாள மொழியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலும் பணிபுரிந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு பாடகியும் ஆவார். மேலும், இவர் வில்லு, தீராத விளையாட்டுப் பிள்ளை, ரெட்டி உள்ளிட்ட பல படங்களில் பாடி உள்ளார். அதோடு தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பாடி உள்ளார்.

Advertisement

கடந்த சில காலமாக தொலைக்காட்சிகளில் தென்படாத தொகுப்பாளினி திவ்யா அவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் திருமணம் நடந்து முடிந்தது. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் குறித்து கூறியுள்ளார். அதில் ரயில் நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு பயங்கரமான சம்பவம் குறித்து விளக்கினார். அந்த திருட்டில் லட்சக்கணக்கில் மதிப்புள்ள நகைகள் மற்றும் லாப் டாப் போன்ற முக்கியமான பொருட்களை இழந்துள்ளார்களாம்.

இதுகுறித்து ரயில் நிலையத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்த போதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் மாறாக அவர்கள் தங்களை ஒரு தீண்டத்தகாதவர் போல பார்த்ததாகவும், சிசிடிவி கேமராவில் திருடனை திருடனை பிடிக்கச் சொன்ன போது போலீசார் நக்களாக சிரித்தனர் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்திவ்யா .

Advertisement
Advertisement