ஆமாம், என்னை விட என் கணவர் இத்தனை வயது இளையவர் - ஷாக் கொடுத்த சூப்பர் சிங்கர் மாளவிகா.
தன்னை விட தன் கணவர், வயதில் இளையவர் என்று மாளவிகா கூறி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பி கொண்டு இருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இது சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது. அதிலும் சூப்பர் சிங்கர் என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் சூப்பர் சிங்கர் பல சீசன்களை கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சூப்பர் சிங்கர் சீசன் 8 சமீபத்தில் தான் படு கோலகளமாக நிறைவடைந்தது.
https://twitter.com/Mysteri13472103/status/1454379172168548361
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாளவிகா சுந்தர். தற்போது இவர் பாடலுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு படங்களில் பட வாய்ப்பு வந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போல் ஹிந்தியிலும் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பைனல் வரை சென்றார்.
ஆனால், மாளவிகா அதில் வெற்றி பெற முடியவில்லை. சமீபத்தில் கூட மாளவிகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் தவறாக மெசேஜ் செய்த ஒருவரை பற்றி கூறி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இவர் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார.
https://twitter.com/Mysteri13472103/status/1454379497407475716
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாளவிகா பதில் அளித்து கொண்டு இருந்தார. அப்போது ரசிகர் ஒருவர, உங்கள் கணவர் உங்களை விட வயதில் சிறியவரா ? இல்லை நீங்கள் சிறியவரா ? என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மாளவிகா, என்னைவிட அவர் ஒரு வருடம் இளையவர் அவருக்கு முப்பத்தி இரண்டு வயது ஆகிறது என்று கூறியிருக்கிறார். மற்றொரு ரசிகர் ஒருவர் இரண்டு உறவுகளுக்குள் இருக்கும் வயது வித்தியாசத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பொன்னை விட பையன் வயது அதிகமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை பிரச்சினை கிடையாது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும் மரியாதை இருக்கவேண்டும் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.