விஜய் 63 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் சூப்பர் சிங்கர் குழந்தை.! எல்லோருக்கும் பிடித்த நபர் தான்..!
சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மூன்றாவதாக முறையாக மீண்டும் இணைகிறது அட்லீ மற்றும் விஜய்யின் வெற்றிக் கூட்டணி. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, கதிர், விவேக் ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நடிகர்கள் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதைத்தொடர்ந்து, தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில், சென்னை பாஷை பேசியும், தன்னுடைய கானா பாடலால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து வரும், குழந்தை நட்சத்திரம் பூவையார் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு பாடலும் அவர் பாடவுள்ளாராம்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்து வரும் பூவையர் விஜய் படத்திலும் நடிக்க உள்ளார் என்ற செய்தியை கேட்டதும்
ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.