பாசிட்டிவான விஷயத்தை மட்டும் பேசுங்கள் - ராஜலக்ஷ்மி விடியோவிற்கு ரசிகர்கள் பதில்.

By subhashini · 21/9/2022

பாசிட்டிவான விஷயங்களை மட்டும் பேசுங்கள் என்று சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி பதிவிட்டு இருக்கும் உருக்கமான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. இந்த சூப்பர் சிங்கர் மேடையில் இவர்கள் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். பின் போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார்.

அதோடு இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இதை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது.

புஸ்பா படம் :

தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார். புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ரி – கிரியேட் பாடல்:

அதே போல ”வாயா சாமி ” பாடலை செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் ரி கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். அந்த வீடியோ செம்ம வைரலானது. சமீபத்தில் கூட சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாட்டு பாடி வாக்கு சேகரித்து இருந்தார்கள். தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.

ராஜலக்ஷ்மி பதிவிட்ட வீடியோ:

சமீபத்தில் கூட ராஜலக்ஷ்மி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதியினர் தங்களுடைய வீட்டுக்கிரக பிரசவம் வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்கள். ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது ராஜலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஒருவரை பார்த்தவுடன் நீ ஏன் இளைத்து போய்விட்டாய்? ஏன் கருப்பாகி விட்டாய்? இது உனக்கு நல்லாவே இல்லை என்றெல்லாம் நெகட்டிவான விமர்சனங்களை சொல்லாமல் அவர்களை ஒரு நிமிடம் கவனித்து அவரிடம் இருக்கும் ஒரு சில நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லுங்கள்.

View this post on Instagram

A post shared by Rajalakshmi Senthilganesan (@rajalakshmifolk_official)

வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்:

நீங்கள் ஹேர் ஸ்டைல் செய்திருக்கிறது அழகாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லி பாருங்கள். கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சொல்பவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று கூறியிருந்தார். இதை பார்த்து ரசிகர்கள், உங்களுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் உங்களைப் பற்றி நெகட்டிவாக பேசிக் கொண்டிருக்கும் போது நீங்கள் இந்த மாதிரி பாசிடிவ் தெரிவிப்பது நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ராஜலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full