ஹாய், ஐ எம் என் USA - வெளிநாட்டில் இங்கிலீஷீல் பொளந்து கட்டிய சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி

By Rajkumar · 1/2/2024

‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

மேலும், போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார்.அதோடு இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள்.

மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது.தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார். புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

https://twitter.com/chettyrajubhai/status/1753003115094426064

இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது. அதே போல ”வாயா சாமி ” பாடலை செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்து வருகின்றனர்.

அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருவது வழக்கம் அந்த வகையில் சமீப காலமாக ராஜலக்ஷ்மி அடிக்கடி மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இவரது இந்த Transformationஐ பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் கேலி செய்தனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்த ராஜலக்ஷ்மி 'ஒரு சிலர் சரியாக விமர்சனம் செய்தால் அதை நான் ஏற்றுக் கொள்வேன் ஒரு சிலர் அக்கா உங்களுக்கு புடவை தான் அழகாக இருக்கிறது.

ஆனால், இது உங்களுக்கு பொருத்தமாக இல்லை என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது ஒரு உரிமை இருக்கிறது. ஆனால், இவங்கலாம் என்ன இந்த மாதிரி டிரஸ் பண்றது என்று சொல்பர்கள் எங்களை காயப்படுத்த வேண்டும் என்று தான் அப்படி செய்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் பெருசாக கண்டுகொள்வது இல்லை என்று கூறியுள்ளார். இதுஒருபுறம் இருக்க ராஜலட்சுமியும் ராஜலட்சுமி 'Licence' என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full