சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற செந்தில் கணேஷ்.! பல மாதம் கழித்து வந்த பம்பர் பரிசு.!

By Rajkumar · 18/3/2019

விஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி கடந்த ஆண்டு ஜூலை ஞாயிற்றுகிழமை (ஜூலை 15) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்த வந்த வண்ணம் இருக்கிறது. 

https://twitter.com/iSenthilGanesh/status/1106531455721570306

இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இந்த தம்பதியினர் பிரபு தேவா நடிப்பில் வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ என்ற பாடலை இவர்கள் இருவரும் இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி படு ஹிட்டானது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் பாடி வருகின்றனர். சமீபத்தில் கூட செந்தில் கணேஷ் ராஜலட்சுமி மீண்டும் இணைந்து ஒரு புதிய பாடல் ஒன்றைபாடியுள்ளனர் . இயக்குனர் ராம் சிவா இயக்கி வரும்’ ஏன் காதலி சீன் போடு’ற என்ற படத்திற்கு ஆம்பூரில் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நில்லா கல்லுல’ என்ற பாடலை செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடியுள்ளனர்.

இப்படி அடுத்தடுத்து பட வைப்புகளால் திக்குமுக்கு ஆகியுள்ள இந்த தம்பதியருக்கு சூப்பர் சிங்கர் பட்டதை வென்றதன் மூலம் தற்போது தான் பரிசு கிடைத்துள்ளது. இவர்கள் இருவருக்கும் அருண் எக்ஸலோ சார்பில் புதிய வீட்டிற்கான சாவியை வழங்கியுள்ளனர். அந்த தகவலை செந்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=9I2IwbqbtWE&feature=youtu.be

Tamil Behind Talkies AMP · Quick view
View full