எங்க பெயர் போட்டு ஒரு கேரவன் - சந்தோஷத்தில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில் பகிர்ந்த வீடியோ

By subhashini · 23/6/2025

சூப்பர் சிங்கர் பிரபலம் செந்தில்-ராஜலக்ஷ்மி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மட்டும் இருக்கின்றார்கள். சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட, மழலை குரல்கள் ஒலிக்கும் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியை மாகா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரம் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், ஒவ்வொரு சீசனில் போட்டியாளர்கள் பக்தி பாடல்களை பாடி மக்களை கவர்ந்து வருவார்கள். அந்த வகையில் இந்த வாரம் பக்தி சுற்று நடைபெறுகிறது. மேலும், இந்த பக்தி சுற்றில் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்- ராஜலட்சுமி இருவருமே கலந்து கொண்டிருந்தார்கள்.

செந்தில்-ராஜலக்ஷ்மி பதிவு:

அதோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவர்களுக்கு தனி கேரவன் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக தான் ராஜலக்ஷ்மி-செந்தில் இருவருமே பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்கள். அதில் அவர்கள், Caravan எப்டி இருக்கும். அட அது ஒரு வீடு மாதிரி எல்லாமே இருக்கும். அப்டியா ஒரு தடவயாவது உள்ள போயி பாத்துரனும் மேன்னு நெனச்சது ஒரு காலம். இப்ப எங்க பெயர் போட்டு எங்களுக்குன்னு ஒரு Caravan. உண்மையாவே "Goosebumps moment". நம்ம, நம்ம வேலைய நேசிச்சு செஞ்சிட்டு இருந்தா நம்ம வாழ்க்கை ஒரு நாளு நம்ம நினைச்ச மாதிரி இல்ல, நம்ம நினைச்சதை விட சூப்பரா மாறும். அப்படிங்கறதுக்கு இதுவும் ஒரு உதாரணம் . இந்த வாழ்க்கையை தந்த இறைவனுக்கு, மக்களுக்கும் ,விஜய் டிவி சூப்பர் சிங்கர் மேடைக்கும் நன்றி என்று கூறி இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Behind Talkies (@behindtalkies)

செந்தில்-ராஜலக்ஷ்மி குறித்த தகவல்:

என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலக்ஷ்மி. இவர்கள் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் இவர்கள் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். அதோடு போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சினால் பாடி வென்று வீட்டை தட்டிச் சென்றார்.

செந்தில்-ராஜலக்ஷ்மி படங்கள்:

அதோடு இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது. அதேபோல் ராஜலக்ஷ்மி கூட படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full