நான் ரொம்ப மனம் உடைந்து விட்டேன் - காதல் தோல்வி பற்றி சிவாங்கி சொன்ன விஷயம்
தன்னுடைய காதல் தோல்வி குறித்து மனம் திறந்து சிவாங்கி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவாங்கி. ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
இவர் மிகச்சிறந்த பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். மூன்று சீசனாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக சிவாங்கி பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனியாக ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகளும் வந்தது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருந்தார்.
சிவாங்கி குறித்த தகவல்:
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன் பின் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் ஷிவாங்கி நடித்து இருந்தார். அதனை அடுத்து குக் வித் கோமாளி 4வது சீசனில் சிவாங்கி குக்காக வந்து இருந்தார்.
சிவாங்கி படங்கள்:
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இவர் நன்றாக சமைத்து மக்கள் மத்தியில் தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்தார். அதோடு அந்த சீசனில் இவர் டாப் 5ல் இருந்தார். அதற்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சினிமா, பாடல் பாடுவது, நிகழ்ச்சி என சிவாங்கி பட்டைய கிளப்பிக்கொண்டு இருந்தார். தற்போது சிவாங்கி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சிவாங்கி பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அடித்த பேட்டியில் சிவாங்கி தன்னுடைய காதல் தோல்வி குறித்து கூறியிருந்தது, நான் சிங்கிள் தான். இதற்கு முன்பு நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மைதான். இப்போ பிரேக் அப் ஆகிவிட்டது. அது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்த ஹார்ட் பிரேக் எனக்கு ரொம்ப வழியை கொடுத்தது. அதற்கு பின் என்னை நானே பார்த்துக்கொள்ள துவங்கி விட்டேன். அழகான பசங்க ஊர் முழுக்க இருப்பாங்க. நமக்கு அவர்களை பிடிக்கும்.
காதல் தோல்வி:
அவர்களுக்கு நம்மளை பிடிக்கணும் என்று அவசியம் கிடையாது. பெண்கள் ஆண்களிடம் காதலை சொல்வதை விட ஆண்கள் நம்மிடம் காதலை சொன்னால் தான் நன்றாக இருக்கும். காரணம், பெண்கள் காதலிக்கும் ரிலேஷன்ஷிப்பை விட ஆண்கள் காதலிக்கும் ரிலேஷன்ஷிப் தான் சந்தோசமாக இருக்கும். ஒரு பெண்ணுக்கு, ஆண் லவ் பண்ணுகிறானா என்ற எண்ணம் வரும். ஆனால், ஒரு ஆணுக்கு அவள் எப்படி நம்மை ட்ரீட் செய்கிறார் என்று எண்ணம் வரும் என்று கூறி இருக்கிறார்.