'இவர் கல்லூரியில் படிக்கும் பெண்கள் பாதுகாப்பா இருப்பாங்கனு நம்புறேன்' - சில்மிஷ பேராசிரியரின் லட்சணத்தை காண்பித்த சௌந்தர்யா.

By Rajkumar · 20/3/2022

பொதுவாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் புது புது வித்தியாசமான கான்செப்டில் பல நிகழ்ச்சிகளை விஜய் டிவி தொகுத்து வழங்கி வருகிறது. அந்த வகையில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஜூனியர்,சீனியர் என்று இரு பிரிவுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பேர் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்துள்ளார்கள்.

பகல் நிலவு விக்னேஷ் - சௌந்தர்யா

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் சௌந்தர்யா நந்தகுமார். இவர் 2010 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் பாடிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. பின் இவர் 2015 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடரில் முன்னணி நடிகையாக நடித்தார்.

சௌந்தர்யா நடித்த சீரியல்:

இந்த தொடரில் இவர் நடித்த ரேவதி என்ற கதாபாத்திரத்திற்கு பாராட்டுகளையும் பெற்று இருந்தார். இந்த சீரியல் 700 அத்தியாயங்கள் ஒளிபரப்பப்பட்டது. பின் திடீரென்று சீரியல் இருந்து இவர் வெளியேறினார். இதுகுறித்து விஜய் டிவியில் விளக்கம் அளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து சௌந்தர்யா பின் ஷார்ட் பிலிம் படங்களிலும் நடித்து உள்ளார். அதிலும் இவர் நடித்த yours shamefully ஷார்ட் பிலிம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. பின் இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.

சௌந்தர்யா நடித்த படம்:

அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். அப்போது இவர் முகென் உடன் சேர்ந்து ‘சத்தியமா சொல்லுறேண்டி’ என்ற பாடலை பாடியது பெரும் பிரபலமானது. இறுதியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

சௌந்தர்யாவிடம் தவறாக பேசிய நபர்:

ஆனால், இவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. காரணம் படத்தில் ஒரு செகண்ட் வந்து செல்லும் ரோல் தான். இது ஒரு பக்கமிருக்க, சௌந்தர்யா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அவர் தான் அடிக்கடி நடத்தும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோ, ரசிகர்களுடன் உரையாடுவது என ஏதாவது ஒன்று செய்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். இந்நிலையில் சௌந்தர்யா பதிவிட்டுள்ள போஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்னவென்றால், சௌந்தர்யாவிடம் ஒரு கல்லூரி ஆசிரியர் இவரை படுக்கைக்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இன்ஸ்டாவில் சௌந்தர்யா பதிவிட்ட பதிவு:

அதுமட்டுமில்லாமல் அதில் அவர் சௌந்தர்யாவை மோசமாக வர்ணித்தும் உள்ளார். இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சௌந்தர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த நம்பரை பிளாக் செய்து விட்டதாகவும், இவரிடம் படிக்கும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலானது அடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த நபர் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சவுந்தர்யாவின் இந்த தைரியமான செயல் பார்த்து பாராட்டி உள்ளார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full