பீஸ்ட் படத்தை தொடர்ந்து லியோ படம் குறித்தும் பேசிய ரஜினி - வைரலாகும் வீடியோ

By Dhilip Kumar · 16/10/2023

லியோ படம் குறித்து ரஜினி கூறியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் விஜய்- ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் பனிப்போர் நடந்து கொண்டுதான் வருகிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் சர்ச்சை பயங்கர வைரலானது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள்.

இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது.
அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த பாடல் வரிகள் எல்லாம் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தார்கள். மேலும், ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்று பேசி இருந்தார்.

அதோடு ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு, காக்கா கதையும் விஜய்யை குறிப்பிட்டு சொன்னதாக விஜய் ரசிகர்கள் பலரும் ரஜினி மீது கடுப்பானார்கள். இதனால் ஜெயிலரை failure ஆக்குவோம் என்று விஜய் ரசிகர்கள் சபதம் போட்டனர். அதே போல சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விஜய் ரசிகர்கள் சொந்தம் கொண்டாடியதால் ரஜினி- விஜய் ரசிகர்கள் மத்தியில் கலவரம் அதிகமானது. இது குறித்து பல பிரபலங்கள் அறிவுரை சொல்லி இருந்தார்கள்.

https://twitter.com/RajiniFollowers/status/1713810504467296428

இப்படி ஒரு நிலையில் தான் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இந்த படம் எதிர்பார்த்தை விட மிக பெரிய பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் எல்லாம் ஜெயிலர் சாதனையை லியோ முறியடிக்கும் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது.

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தின் டிக்கெட் புக்கிங் எல்லாம் இப்போதே சூடு பிடித்து இருக்கிறது.

https://twitter.com/Bloody_Expiry/status/1713814625941365038

லியோ குறித்து ரஜினி சொன்னது:

இதுவரை லியோ படத்திற்கு இந்தியா, வெளிநாடுகளிலும் முன் பதிவு டிக்கெட் கோடி கணக்கில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி, லியோ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வேண்டும். லியோ படம் வெற்றியடைய நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதை நெட்டிசன் ஒருவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து, ரஜினி கூறுவதை வேதவாக்காக கேட்டு நடக்கும் ரஜினி ரசிகர்கள் ரஜினியை போன்று லியோ படம் வெற்றியடைய ஆண்டவனை பிரார்த்திப்பார்களா அல்லது ரஜினியை அவமதிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் !

Tamil Behind Talkies AMP · Quick view
View full