கமலை மன்னிப்பு கேட்க சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் - கர்நாடக நீதிமன்றத்தை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்

By subhashini · 18/6/2025

தக் லைப் பட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் போட்டு இருக்கும் உத்தரவு தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக கமலின் கன்னட மொழி சர்ச்சை தான் பூகம்பமாக வெடித்து கொண்டு இருக்கிறது. கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

மேலும், கடந்த மாதம் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்து இருந்தது. இந்த விழாவிற்கு தக் லைப் பட குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் வருகை தந்திருந்தார். அப்போது விழாவில் சிவராஜ் குமாரை பார்த்து கமல், உயிரே உறவே தமிழே. சிவராஜ்குமார் மற்றொரு மாநிலத்தில் வாழும் என்னுடைய குடும்பம். உங்களுடைய பாசை தமிழில் இருந்து வந்தது என்று கூறி இருந்தார். தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று கமல் சொன்னது கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பூகம்பமாக வெடித்தது. கன்னட ரக்ஷனா வேதிகே உள்ளிட்ட பல கன்னட இயக்கங்கள் கமலின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து எச்சரிக்கை விட்டு இருந்தார்கள்.

கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள்:

அதுமட்டுமில்லாமல் சில கன்னட அமைப்புகள் தக் லைப் படத்தினுடைய போஸ்டர்களையும் கிழித்து இருந்தார்கள். இதை அடுத்து கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் அவருடைய படங்களை ஓட விட மாட்டோம் என்று சில அமைப்புகள் அழைப்புகள் விடுத்திருந்தது. இதை அடுத்து கமலின் தக் லைப் படம் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் சொன்னார்கள். பின் கமல் அவர்கள் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கர்நாடக நீதிமன்றம்:

அப்போது கர்நாடகா நீதிபதி, மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிந்திருக்கும். மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்று கூறியிருந்தது. இதற்கிடையில் கமலஹாசன், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது என்று கூறியிருந்தார். இதை அடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நீங்கள் அனுப்பிய கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை. மன்னிப்பு கேட்பதில் என்ற அப்படி என்ன ஈகோ? என்று கேட்டிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=0e1U4p_jOCg

கமல் எடுத்த முடிவு:

அதற்கு கமல், என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகுவதை ஒத்தி வைப்பதாக கமல் சார்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள். இதனால் நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 10ஆம் தேதி ஒத்து வைத்திருந்தார்கள். பின் இந்த வழக்கை மீண்டும் ஒத்தி வைத்து இருந்தார்கள். இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் கமல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது.

https://www.youtube.com/watch?v=SvemWsWcSMw

உச்சநீதிமன்றம் சொன்னது:

அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், திரைப்படம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருந்தால் அதனை எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியிடுவதற்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். தக் லைப் படம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். கன்னடம் மொழி குறித்து கமலஹாசன் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. உயர் நீதிமன்றம் எப்படி இதை சொல்லலாம்? தணிக்கை சான்றிதழ் பெற்ற எந்த படமாக இருந்தாலும் அது வெளியாகுவதை தடுக்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது தான் உயர் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தினுடைய கடமைகள் என்று கூறியிருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full