கென்னிடம் ஷூட்டிங்கில் நான் பேசாமல் இருந்த காரணம் இது தான் - நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு ஓபன் டாக்

By subhashini · 1/4/2026

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ் மகன் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் தான். இந்த படத்தில் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள்.

இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த விடுதலை 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கென் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வாத்தி என்ற படத்திலும் கென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் யூத் என்ற படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

கென் கருணாஸ் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அதோடு இந்த படத்தின் வெளியாக பல அறிமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சினிமாவில் அறிமுமாகி இருப்பதால் பலருக்குமே இந்த படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய சக்சஸ் மீட் நடைபெற்று இருக்கிறது. இதில் பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு, யூத் படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

சுராஜ் வெஞ்சராமூடு பேசியது:

அதற்கு இயக்குனர் கென்னுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர் இயக்குனர் மட்டும் இல்லை, பிறவி நடிகரும் கூட. கதை சொல்லும் போது அவரிடம் ஒரு பெயர் இருந்தது. அந்த பயர்தான் உங்களுடைய வெற்றி. இது மட்டுமில்லாமல் இதைவிட இன்னும் உயர்ந்த இடத்திற்கு நீங்கள் செல்வீர்கள். இப்போது நான் உங்களுடைய ரசிகன் ஆகிவிட்டேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் இதைவிட பெரிய ப்ரொடியூசர் ஆகிவிடுவார், வாழ்த்துக்கள் கருப்பையா. என்னுடன் பணியாற்றிய நளினி மேடம் தேவதர்ஷினி மேடம் எல்லோருக்குமே நன்றி.

https://www.youtube.com/watch?v=h-91Ow1Ba4A

கென் பற்றி சொன்னது:

படப்பிடிப்பில் எனக்கு ஏதாவது டயலாக் இருக்கும் நாளில் கென் உன்னிடம் சரியாக பேசி இருக்க மாட்டேன். அதற்கு காரணம் எனக்கு வசனம் மறக்கக்கூடாது என்பதுதான். மலையாளத்தில் படம் நடிக்கும் போது வசனத்தை வேகமாக கொடுங்கள் என்பேன். ஆனால், நீங்க வசனம் கொடுக்கும் போது என்னடா நாளைக்கே படம் ரிலீஸ் பண்ண போறியா? கொஞ்சம் டைம் கொடுடா என்று கேட்பேன். அந்த டென்ஷனில் தான் நான் பேசி இருக்க மாட்டேன். இந்த படத்தை பார்த்துவிட்டு ஒரு பெரிய ஹீரோ போன் செய்தார். அவர் வேறு யாருமில்லை சிலம்பரசன் சார் தான். இந்த படத்தை ரொம்பவே பாராட்டி பேசி இருந்தார். சிலம்பரசன் சாருக்கும் இந்த படத்துக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full