ஆஸ்கர் கிடைக்கும்னா 4வது குழந்த பெத்துக்க ரெடி - வீர தீர சூரன் பட விழாவில் மலையாள நடிகர் சுராஜ் சொன்னது

By subhashini · 21/3/2025

வீர தீர சூரன் படத்தின் ட்ரைலர் விழாவில் மலையாள நடிகர் சுராஜ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா திரையுலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக நடிகர் விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் கேஜிஎஃப் இல் இருந்த பூர்வ குடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்கிரோன் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஸ்டுடியோ ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

வீர தீர சூரன்:

இதை அடுத்து விக்ரம் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வரிசையில் தற்போது விக்ரம் அவர்கள் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை முன்னணி நட்சத்திர இயக்குனரான எஸ். யூ. அருண்குமார் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

மேலும், இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் இந்த மாதமே வருகிற 27ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் வீர தீர சூரன் படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் சியான் விக்ரம், எஸ் ஜே சூர்யா உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=Pp6zN9HYJos

விழாவில் சுராஜ் சொன்னது:

அப்போது விழாவில் கலந்து கொண்ட மலையாள நடிகர் சுராஜ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதில் அவர், எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். முதலில் பையன் பிறக்கும்போது மாநில விருது கிடைத்தது. இரண்டாவது பையன் பிறக்கும்போது மீண்டும் மாநில விருது கிடைத்தது. மூன்றாவது மகள் பிறக்கும்போது மாநில விருது மற்றும் தேசிய விருது கிடைத்தது. இது நல்லா இருக்கே என்று எனக்கு தோன்றியது. அடுத்ததாக ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக என்னுடைய மனைவியிடம் சொல்லி நான்காவது குழந்தையும் பெற்றுக்கொள்ள ரெடியாக இருக்கிறேன் என்று கலகலப்பாக பேசியிருக்கிறார்.

சுராஜ் குறித்த தகவல்:

மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் தான் சுராஜ். இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் தான் மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இதற்கிடையில் இவர் 2005 ஆம் ஆண்டு சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காசிநாதன், வாசுதேவ், ஹிருதயா என்ற மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். மூத்த மகன் காசிநாதன் சில படங்களில் நடித்திருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full