இரண்டரை வருட உழைப்பு, ஆயிரம் பேர் பட்ட கஷ்டம்- கங்குவா படம் குறித்து சூர்யாவின் எமோஷனல் பேச்சு

By subhashini · 1/9/2024

கங்குவா படத்தின் அப்டேட் குறித்து நடிகர் சூர்யா எமோஷனலாக கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கார்த்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் 'மெய்யழகன்'. இந்த படத்தில் அரவிந்த் சுவாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்திருக்கிறார். இந்த படம் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இந்த விழாவில் மெய்யழகன் படக்குழுவினர் உடன் சூர்யாவும் கலந்துகொண்டிருந்தார். அப்போது விழாவில் நடிகர் சூர்யா, கங்குவா தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக இருக்க இரண்டரை வருடங்களாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடைய உழைப்பு இருக்கிறது.

இசை விழாவில் சூர்யா:

இந்த படத்திற்காக பல பேர் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த படம் அக்டோபர் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய பிளான் செய்தார்கள். ஆனால், அன்றைய தினத்தில் தமிழ் சினிமாவின் மூத்தவர். நான் பிறக்கும்போது சினிமாவில் நடித்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய 'வேட்டையன்' படம் ரிலீஸ் ஆகின்றது. இதனால் சூப்பர் ஸ்டாருக்கு மரியாதை செய்வது தான் சரியாக இருக்கும். அது உங்களுக்கும் புரியும்.

https://youtu.be/cvYV7373aA0?si=hwMI-1wc7peGavhb

கங்குவா குறித்து சொன்னது:

கங்குவா ஒரு குழந்தை. அது எப்போது ரிலீஸ் ஆகின்றதோ அப்போது தான் அதனுடைய பிறந்த நாள். அன்றைய தினத்தை பண்டிகையாக நீங்கள் கொண்டாடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் என்றும் என்னுடன் இருப்பீர்கள் என நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி சூர்யா சொன்ன விஷயத்தின் மூலம் கங்குவா படத்தினுடைய ரிலீஸ் தேதி தள்ளிப் போனது உறுதியாகி இருக்கிறது. இதுவரை கங்குவா படத்தினுடைய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கவில்லை.

கங்குவா படம்:

இதனால் ரசிகர்கள் பலருமே அக்டோபர் 10 ஆம் தேதி தான் ரிலீசாகும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது சூர்யா ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு வருகிறது. வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, இந்த கன்னடம் என 20 மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ‘ஆதி நெருப்பே. பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full