நாங்கள் மும்பையில் குடியேறியதற்கு இதுதான் காரணம்- மனம் திறந்து நடிகர் சூர்யா சொன்ன விஷயம்
மும்பைக்கு குடிப்பெயர்ந்த காரணம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகர் சூர்யா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.
அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கங்குவா படம் :
மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் இந்த இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 20 மொழிகளில் வெளியாக இருக்கிறது. அக்டோபர் 10-ஆம் தேதியே இந்த படம் திரையரங்களில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் ரீலிஸ் தள்ளிப்போனது. பின் இந்த படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருந்தது.
படம் குறித்த தகவல்:
சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதோடு சூர்யா அவர்கள் பல சேனல்களுக்கு பேட்டியும் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் மும்பையில் குடி பெயர்ந்த காரணம் குறித்து சூர்யா கூறியிருந்தது, நான் இதைப் பற்றி வெளிப்படையாக சொல்லுவேன்.
சூர்யா பேட்டி:
ஜோதிகாவுக்கு 18 வயதிற்கும்போதே அவர் சென்னைக்கு வந்து விட்டார். அதற்கு பிறகு 27 ஆண்டுகள் சென்னையில் தான் இருந்தார். என்னுடனும், என்னுடைய குடும்பத்துடன் தான் அவர் சென்னையில் இருந்தார். அதற்காக அவருடைய உறவினர்கள், கேரியர் என எல்லாமே விட்டார். இப்போது மீண்டும் 27 வருடங்களுக்கு பிறகு அவருடைய பெற்றோர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட்டு வருகிறார். ஒரு ஆணுக்கு என்னென்ன விஷயங்கள் தேவைப்படுதோ அதே விஷயங்கள் பெண்களுக்கும் தேவைப்படும்.
மும்பையில் இருக்க காரணம்:
அவருக்கு என்னென்ன விஷயங்கள் தேவைப்படுகிறதோ அது எல்லாம் செய்து தர வேண்டும் என்று எனக்குள் தோன்றி கொண்டிருந்தது. நடிகராகவும் அவருடைய வளர்ச்சியை எண்ணி நான் சந்தோஷப்படுகிறேன். இப்போது மாதத்தில் பத்து நாட்கள் மும்பையில் என்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறேன். மீதம் உள்ள 20 நாட்களில் நான் 20 மணி நேரமும் கூட வேலை பார்க்க தயார். ஆனால், மும்பையில் என்னுடைய குடும்பத்துடன் இருக்கும் அந்த பத்து நாட்கள் அலுவலகத்துக்கு கூட செல்லாமல் என்னுடைய குடும்பத்துடன் நேரத்தில் செலவழிப்பேன் என்று பல விஷயங்களை கூறி இருக்கிறார்.