அடேங்கப்பா, சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தின் வசூல் 235 கோடியா - இது உண்மையா? உருட்டா? முழு விவரம் இதோ
சூர்யாவின் ரெட்ரோ படத்தின் வசூல் தொடர்பான செய்தி தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ரெட்ரோ. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.
ரெட்ரோ படம்:
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்று இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர் எல்லோருமே கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்கள். அதோடு ரெட்ரோ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் அகரம் பவுண்டேசனுக்கு 10 கோடி ரூபாயை சூர்யா கொடுத்திருந்தார். பின் இது தொடர்பாக சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு பலரும் சூர்யாவின் செயலை பாராட்டி இருந்தார்கள்.
ரெட்ரோ வசூல்:
அது மட்டும் இல்லாமல் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளி வந்ததால் இந்த படம் மூன்று வாரங்களிலேயே திரையரங்கில் இருந்து தூக்கி விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் உடைய மொத்த வசூல் விவரம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த படம் வெளியாகி முதல் வாரத்திலேயே உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.
நெட்டிசன்கள் கிண்டல்:
அதற்குப்பின் எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. சில தினங்களுக்கு முன்பு இந்த படம் இதுவரை மொத்தமாக உலக அளவில் 235 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது இதை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். காரணம், இரண்டே வாரத்திலேயே தியேட்டரில் இருந்து ரெட்ரோ படத்தை எடுத்து விட்டார்கள். அப்படி இருக்கும்போது எப்படி இந்த படம் 235 கோடி வசூல் செய்தது? என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள்.
உண்மை விவரம்:
அதோடு சிலர் கிண்டல் கேலி எல்லாம் செய்து இருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே ரெட்ரோ பட குழு சொன்னது போல் 235 கோடி டெட்ரோ படம் வசூல் செய்தது உண்மைதான். இந்த படத்தினுடைய திரையரங்கு வசூல் மற்றும் ஓடிடி உரிமை, சேட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை என அனைத்துமே சேர்த்து தான் 235 கோடி வாங்கி இருக்கிறது. அதை குறிப்பிடாமல் மொட்டையாக 235 கோடி என்று குறிப்பிடத்தால்தான் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள். மொத்தமாக இந்த படம் திரையரங்களில் 110 கோடி மட்டும் தான் வசூலித்ததாக கூறப்படுகிறது.