சூர்யாவின் 'கருப்பு' படம் முதல் நாளே வசூல் வேட்டை செய்ததா? எவ்வளவுன்னு நீங்களே பாருங்க
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பல பிரச்சினைகளைத் தாண்டி நேற்று கருப்பு படம் வெளியாகி இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் கருப்பு படத்தின் உடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது முதல் நாளில் இந்த படம் கிட்டத்தட்ட 20.66 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பக்கா விருந்தாக ரசிகர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த ஆண்டின் முதல் 100 கோடி வசூல் செய்யும் தமிழ் திரைப்படமாக கருப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
கருப்பு படம்:
படத்தில் இந்திரன்ஸ் கேரளாவில் இருந்து தன்னுடைய மகளின் ஆபரேஷன்காக தமிழ்நாடு வருகிறார். வந்த இடத்தில் அவரின் நகைகளை திருடர்கள் கொள்ளை அடித்து செல்கிறார்கள். அதன் பின்
போலீசார் அந்த நகைகளை எல்லாம் கண்டுபிடித்து தருகிறார்கள். ஆனால், அவரது 60 பவுன் தங்க நகைக்கு பதிலாக 45 பவுன் மட்டுமே திரும்ப தருகிறார்கள். அதோடு போலீஸ் நகையை இப்போது தர முடியாது நீதிமன்றத்தின் மூலமாகத்தான் உங்களால் வாங்கிக் கொள்ள முடியும் என்றும் சொல்கிறார்கள்.பின் இந்த வழக்கு ஆர்.ஜே பாலாஜியிடம் செல்கிறது. சுலபமாக முடிய வேண்டிய ஒரு வழக்கை வேண்டும் என்று இந்திரன்ஸ் இடமிருந்து ஃபீசை வாங்கிக் கொண்டு இழுத்து அடித்து கொண்டிருக்கிறார் பாலாஜி.
கதைக்களம்:
இந்த வழக்கு நான்கு மாதங்களுக்கும் மேலாகவே சென்று கொண்டிருக்கின்றது. ஒரு கட்டத்தில் பாலாஜியால் நமக்கு நீதி கிடைக்காது என்று இந்திரன்ஸ் தெரிந்து கொள்கிறார். அதற்குப் பின் இந்திரன்சை அடித்து இனி இந்த வழக்கை நீ எப்படி நடத்துற பார்க்கிறேன் என்று பாலாஜி சவால் விடுகிறார். அந்த நேரத்தில் தான் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள கருப்பு சாமியிடம் இந்திரன்ஸ் தன்னுடைய வேதனையை சொல்லி அழுகிறார். என்னுடைய பிரச்சனையை தீர்த்து வை என்று மிளகாய் அரைத்து கருப்புசாமிக்கு பூசி இந்திரன்ஸ் பேசுகிறார். பக்தருடைய வேண்டுதலை ஏற்று வேட்டையாடும் கருப்பாக என்ட்ரி கொடுக்கிறார் சூர்யா.
படத்தின் கதை:
சூர்யா வந்தவுடனே ஆர்.ஜே பாலாஜிக்கு தண்டனை கிடைக்கிறது. பாலாஜி சாதுரியமாக பேசி, என்னை கொள்வது எப்படி சரியாகும். நீங்கள் வேண்டுமென்றால் எங்களுடைய நீதிமன்றத்தை மாற்றி காட்டுங்கள் என்று சவால் விடுகிறார். சவாலை ஏற்று நீதிமன்றத்தை சீரமைக்க மனிதனாக கருப்பு வருகிறார். இந்த சவாலில் கருப்புசாமி வெற்றி பெற்றாரா? இல்லையா? கருப்பு கோட் போட்ட ஆசாமி வெற்றி பெற்றாரா? நீதி கேட்டு வந்த இந்திரன்ஸ்க்கு நீதி கிடைத்ததா? தவறு செய்தவர்களுக்கு நீதி விற்கப்பட்டதா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.