பல தடைகளை தாண்டி வெளிவந்த சூர்யாவின் 'கருப்பு' படம் வேட்டை ஆடியதா? இல்லையா? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பல பிரச்சினைகளைத் தாண்டி இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் இந்திரன்ஸ் கேரளாவில் இருந்து தன்னுடைய மகளின் ஆபரேஷன்காக தமிழ்நாடு வருகிறார். வந்த இடத்தில் அவரின் நகைகளை திருடர்கள் கொள்ளை அடித்து செல்கிறார்கள். அதன் பின்
போலீசார் அந்த நகைகளை எல்லாம் கண்டுபிடித்து தருகிறார்கள். ஆனால், அவரது 60 பவுன் தங்க நகைக்கு பதிலாக 45 பவுன் மட்டுமே திரும்ப தருகிறார்கள். அதோடு போலீஸ் நகையை இப்போது தர முடியாது நீதிமன்றத்தின் மூலமாகத்தான் உங்களால் வாங்கிக் கொள்ள முடியும் என்றும் சொல்கிறார்கள்.
பின் இந்த வழக்கு ஆர்.ஜே பாலாஜியிடம் செல்கிறது. சுலபமாக முடிய வேண்டிய ஒரு வழக்கை வேண்டும் என்று இந்திரன்ஸ் இடமிருந்து ஃபீசை வாங்கிக் கொண்டு இழுத்து அடித்து கொண்டிருக்கிறார் பாலாஜி. இந்த வழக்கு நான்கு மாதங்களுக்கும் மேலாகவே சென்று கொண்டிருக்கின்றது. ஒரு கட்டத்தில் பாலாஜியால் நமக்கு நீதி கிடைக்காது என்று இந்திரன்ஸ் தெரிந்து கொள்கிறார். அதற்குப் பின் இந்திரன்சை அடித்து இனி இந்த வழக்கை நீ எப்படி நடத்துற பார்க்கிறேன் என்று பாலாஜி சவால் விடுகிறார்.
அந்த நேரத்தில் தான் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள கருப்பு சாமியிடம் இந்திரன்ஸ் தன்னுடைய வேதனையை சொல்லி அழுகிறார். என்னுடைய பிரச்சனையை தீர்த்து வை என்று மிளகாய் அரைத்து கருப்புசாமிக்கு பூசி இந்திரன்ஸ் பேசுகிறார். பக்தருடைய வேண்டுதலை ஏற்று வேட்டையாடும் கருப்பாக என்ட்ரி கொடுக்கிறார் சூர்யா. சூர்யா வந்தவுடனே ஆர்.ஜே பாலாஜிக்கு தண்டனை கிடைக்கிறது. பாலாஜி சாதுரியமாக பேசி, என்னை கொள்வது எப்படி சரியாகும். நீங்கள் வேண்டுமென்றால் எங்களுடைய நீதிமன்றத்தை மாற்றி காட்டுங்கள் என்று சவால் விடுகிறார்.
சவாலை ஏற்று நீதிமன்றத்தை சீரமைக்க மனிதனாக கருப்பு வருகிறார். இந்த சவாலில் கருப்புசாமி வெற்றி பெற்றாரா? இல்லையா? கருப்பு கோட் போட்ட ஆசாமி வெற்றி பெற்றாரா? நீதி கேட்டு வந்த இந்திரன்ஸ்க்கு நீதி கிடைத்ததா? தவறு செய்தவர்களுக்கு நீதி விற்கப்பட்டதா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தில் சூர்யா கருப்பு சாமியாக சிறப்பாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றிருக்கிறது. அதோடு இது ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
எமோஷனல் சண்டை ஆக்சன் சர்ப்ரைஸ் என அனைத்திலும் சூர்யா மிரட்டி இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பக்கா மாஸ் கமர்சியல் ஹீரோவாக சூர்யா களமிறங்கி இருக்கிறார். சூர்யாவை அடுத்து படத்தில் இன்னொரு ஹீரோ என்றால் அது இந்திரன்ஸ் தான். அவர் வேதனை, கஷ்டம் , வலி அனைத்தையும் தன்னுடைய நடிப்பின் மூலம் காண்பித்து இருக்கிறார். படத்தின் இயக்குனர் பாலாஜியினுடைய வில்லத்தனமான நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது. மேலும், படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார்கள்.
இந்த படம் சூர்யா ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்களுக்குமே ஒரு சிறப்பான விருந்தாக இருக்கிறது. அந்த அளவிற்கு இயக்குனர் பாலாஜி கதையை நேர்த்தியாக கொண்டு சென்று இருக்கின்றார்.
முதல் பாதி எமோசனலாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் பக்கா மாஸாக இருக்கிறது. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலுமே இயக்குனர் கதையை நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படி இயக்குனர் வடிவமைத்திருப்பது பாராட்டுக்கூடிய விஷயம். இடைவெளிக்கு பிறகு காட்சிகள் வெறித்தனமாக இருக்கிறது.
எந்த வகையிலுமே இந்த படம் ரசிகர்களை சலிப்படைய வைக்கவில்லை. திரைக்கதையை தாண்டி படத்தினுடைய வசனங்கள் பட்டைய கிளப்பியிருக்கிறது அதோடு டெக்னிக்கலாக படத்தினுடைய பின்னணி இசை, ஒளிப்பதிவு எல்லாமே படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் கருப்பு படம் சூர்யாவிற்கு ஒரு மிகச்சிறந்த கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறை:
சூர்யா நடிப்பு அற்புதம்
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
ஆக்ஷன் சண்டை காட்சிகள் எல்லாமே அட்ராசிட்டி
கிளைமாக்ஸ் சூப்பர்
கதைக்களம் அருமையாக இருக்கிறது
குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை
மொத்தத்தில் கருப்பு - சிறப்பான வேட்டை