சூர்யாவின் 'ரெட்ரோ' படம் வசூல் வேட்டை செய்ததா?முதல் நாள் வசூல் இவளவு தான் - முழு விவரம் இதோ
சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், கருணாகரன், சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுப்புராஜ் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
ரெட்ரோ படம்:
இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. மேலும், கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு சூர்யா நடிப்பில் ரெட்ரோ படம் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி சுமார் என்றும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ரெட்ரோ படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
படத்தின் வசூல்:
ரெட்ரோ படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் 11.6 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. கங்குவா படத்தை காட்டிலும் இது அதிக வசூல் தான். கங்குவா படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 11.3 கோடி வசூல் செய்திருந்தது. ரெட்ரோ படம் கிட்டத்தட்ட கங்குவாவை விட அதிகமாக வசதி செய்து விட்டது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை ரெட்ரோ முறியடிக்கவில்லை. அமரன் படம் முதல் நாளில் 15 கோடி வசூல் செய்தது. மேலும் ரெட்ரோ படம் இந்திய அளவில் 20 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் ரெட்ரோ படத்தின் வசூல் அதிகமாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=lSqioTxSeKA
படத்தின் கதை
படத்தில் ஜோஜு ஜார்ஜ் தூத்துக்குடியில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார். இவரிடம் அடியாட்களாக சூர்யாவின் அப்பா வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் சூர்யாவின் தந்தை சண்டையில் இறந்து விடுவதால் சூர்யாவை ஜோஜு ஜார்ஜின் மனைவி தான் எடுத்து வளர்க்கிறார். தனக்கு அடியாளாக சூர்யாவை ஜோஜு ஜார்ஜ் வளர்கிறார். இதற்கிடையில் சூர்யா, பூஜா காதலிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராகிறார்கள். அப்போது சூர்யா அடிதடியை விட்டு விட முடிவு செய்தார். இன்னொரு பக்கம் கேரளாவில் கொள்ளையடித்த அரசு கருவூல பொருட்களை எல்லாம் தன்னுடைய வளர்ப்பு தந்தையான ஜோஜு ஜார்ஜிக்கு தெரியாமலேயே சூர்யா மறைக்கிறார்.
படம் குறித்த தகவல்:
இதை அறிந்த ஜோஜு ஜார்ஜ், பூஜாவை கொலை செய்ய நினைக்கிறார். இதனால் சூர்யா தன்னுடைய வளர்ப்பு தந்தை ஜோஜு ஜார்ஜ் கையே வெட்டி விடுகிறார். இதனால் சூர்யா சிறைக்கு செல்கிறார். இதனால் பூஜா நாட்டை விட்டு அந்தமான் தலைமறைவாகிறார். பின் பூஜாவை தேடி திரையிலிருந்து சூர்யா தப்பித்து அந்தமானுக்கும் செல்கிறார். சூர்யா இருக்கும் இடத்தை அறிந்த ஜோஜு ஜார்ஜ் தன்னுடைய அடியாட்களுடன் அந்தமானுக்கு செல்கிறார். இதற்கிடையில் அந்தமானின் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரௌடி கும்பலின் தலைவனுடன் சூர்யாவுக்கு பகையும் ஏற்படுகிறது. அனைத்து பிரச்சனைகளையும் சூர்யா முறியடித்தாரா? அரசு பொருட்கள் நிலை என்ன? பூஜா என்ன ஆனார்? சூர்யா- பூஜா இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதையே.