கே.வி.ஆனந்த் படத்துக்காக லுக்கை மாற்றிய சூர்யா..! வைரலாகும் வீடியோ,புகைப்படம்.!
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கம் 'என் ஜி கே' படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வனமகன், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்த நடித்து வருகிறார்.
மேலும், இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யா காரில் இருந்து இறங்கி செல்லும் வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் சூர்யா வெள்ளை சட்டையில் கருப்பு டையுடன், ஷார்ட் ஹேர் ஸ்டைலில் படு ஸ்டைலிஷாக இருக்கிறார்.
அதே போல நடிகர் மோகன் லாலும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.தற்போது இந்த இரு விடீயோக்களும் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.#surya 37 Thara local getup??????? pic.twitter.com/BHLdy4Pqbx
— Afridisfc (@afridisfc) September 11, 2018