சூர்யாவின் 'கங்குவா' படத்தின் வெளியீடு தேதி தள்ளிப் போகிறதா? காரணம் ரஜினியா? உண்மை நிலவரம்

By subhashini · 26/8/2024

நடிகர் சூர்யாவின் கங்குவா படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் சிவகுமாரின் ஆவார். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு வருகிறது.

கங்குவா படம் :

வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, இந்த கன்னடம் என 20 மொழிகளில் வெளியாக இருக்கிறது. வருகிற அக்டோபர் 10-ஆம் தேதி இந்த படம் திரையரங்களில் வெளியாக இருப்பதால் படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ‘ஆதி நெருப்பே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

https://www.youtube.com/watch?v=ajnCMSC4VPo

படத்தின் ட்ரைலர்:

மேலும், சமீபத்தில் தான் கங்குவா படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. பிரம்மாண்டத்துடன், பின்னணி இசையில் மிரள வைக்கும் அளவிற்கு கங்குவா ட்ரைலர் இருக்கிறது. இதுவரை பார்த்திடாத கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். போர், ரத்தம், பகை, பழிக்குப் பழி என்று ஒட்டுமொத்த ட்ரெய்லரும் கலவரமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அதே நாளில் ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் படமும் வெளியாக இருக்கிறது.

வேட்டையன் படம்:

இந்த படத்தை 'ஜெய்பீம்' இயக்குனர் ஞானவேல் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடித்து இருக்கிறார்கள். இந்தப் படம் அக்டோபர் 10ம் தேதி வர இருக்கிறது. இந்த நிலையில் கங்குவா படத்தினுடைய வெளியீடு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கங்குவா படத்தினுடைய ரிலீஸ் தேதி தள்ளி போக இருப்பதாகவும், தீபாவளிக்கு திரைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம், இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய படங்கள் என்பதால் திரைக்கு வந்தால் குறைவான திரையரங்குகளில் தான் படத்தை வெளியிட முடியும்.

ரிலீஸ் தேதி தள்ளி போக காரணம்:

அதுவும் கங்குவா படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் இரண்டு பாகங்களாக வரவிருக்கிறது. இரண்டுமே பெரிய வசூலை ஈட்டும் என்று படக்குழுவினர் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டு படத்தையும் வெவ்வேறு தினத்தில் வெளியானால் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் கங்குவா படத்தினுடைய ரிலீஸ் தேதி தள்ளி வைப்பது குறித்து தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. அதே தினத்தில் கங்குவா படம் வெளிவருமா? வேறு ஒரு தினத்தில் மாற்ற போகிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் சில தினங்களில் படத்தினுடைய ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full