அன்றே கணித்த சூர்யா - மீண்டும் வைரலாகும் மீம்கள். நீங்களே பாருங்க இத

By Rajkumar · 4/4/2021

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சூயஸ் கால்வாய்யில் எவர் கிறீன் என்ற மிகப்பெரிய கப்பன் கால்வாயின் குறுக்கே நகர முடியாமல் மாட்டிக்கொண்டது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ70,000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து. மேலும், அந்த கால்வாய் வழியாக செல்லக்கூடிய மற்ற சரக்கு கப்பல்களும் செல்ல முடியாமல் இருந்தது. கடந்த மார்ச் 29 ஆம் தேதி சிறு கப்பல்கள் உதவியோடு எவர் கிவன் கப்பலை மிதக்கும் நிலைக்கு கொண்டு வந்து கப்பல் மீண்டும் இயக்கு நிலைக்கு கொண்டவரப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் எவர் கிறீன் கப்பல் குறித்து அன்றே கணித்தார் சூர்யா என்று சமூக வலைதளத்தில் மீம்கள் வைரலாக பரவி வருகிறது. சூர்யா நடித்த சிங்கம் படத்தில் வரும் ஒரு காட்சியில் எவர் கிறீன் என்ற கப்பல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அன்றே கணித்த சூர்யா என்று தற்போது மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்று வரும் இயற்கை அழிவுகள் அனைத்தும் சூர்யாவின் படங்களில் வரும் காட்சிகள் போலவே இருக்கிறது என்று மீம் கிரியேட்டரகள் கிளப்பி விட பின்னர் சூர்யா படங்களில் வரும் காட்சிகளை தற்போது நாட்டில் நடக்கும் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பல்வேறு மீம்கள் வந்த வண்ணம் இருந்தன.

சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சீனாவில் இருந்து வரும் ஒரு நபர் கெட்ட வைரஸை பரப்புவது போன்ற காட்சி காண்பிக்கப்படும். ஜூன் 21 ஆம் தேதியோடு உலகம் அழிய போகிறது என்று சூர்யா அன்றே கணித்துவிட்டார் என்று ஒரு மீம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கஜினி படத்தில் சூர்யாவின் இரண்டாவது டைரியை நயன்தாரா படித்து முடிக்கும் போது ஜூன் 21 ஆம் தேதி வரை தான் அந்த டைரியை எழுதி இருப்பார் சூர்யா. அதனை குறிப்பிட்டே இந்த மீம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full