சூர்யாவின் 'ஐயன்' படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.! வெளியான பல நாள் ரகசியம்.!

By Rajkumar · 21/1/2019

சினிமாவை பொறுத்த வரை ஒரு பல்வேறு படங்கள் முதலில் ஒருவர் நடிப்பதாக இருந்து பின்னர் வேறு ஒரு ஹீரோ அந்த படத்தில் நடிப்பது மிகவும் சகஜமான ஒன்று தான். அந்த வகையில் சூர்யாவின் ஐயன் படமும் ஒன்று.

இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு போன்ற பலர் நடிப்பில் வெளியான 'ஐயன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது விஷால் தானாம்.

ஆம், இந்த படத்தின் கதையை இயக்குனர் கே வி ஆனந்த் முதன் முதலில் விஷாலிடம் தான் கூறியுள்ளார். ஆனால், கதையை கேட்டு விட்டு நடிகர் விஷால் பின்னர் பார்க்கலாம் என்று கே வி ஆனந்திடம் தெரிவித்துவிட்டாராம்.

அதன் பின்னர் கதையில் சூர்யாவிற்கு ஏற்றார் போல சிறு சிறு மாற்றங்களை செய்து சூர்யா நடிக்க வைத்துள்ளார் கே வி ஆனந்த். அதன் பின்னர் இவர்கள் இருவர் கூட்டணியில் மாற்றான் படம் வெளியாகியது. தற்போது மீண்டும் இவர்கள் இருவரது கூட்டணியில் 'காப்பான்' படம் உருவாகிவருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full