நடிகர் நாஞ்சில் விஜயன் மீது பெண் யூடியூபர் கொடுத்த பண மோசடி புகார் -நடந்தது என்ன?

நாஞ்சில் விஜயன் மீது சூர்யா தேவி கொடுத்த புகார்

By subhashini · 17/6/2026

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது பெண் யூடியூபர் ஒருவர் புகார் அளித்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. சோசியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய நபராக இருப்பவர் சூர்யா தேவி. இவர் காது கூசும் அளவிற்கு சர்ச்சையான கருத்துக்களை பேசுபவர். அதுமட்டுமில்லாமல் சில பர்சனல் வாழ்க்கையும் தலையிட்டு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக இருந்தார்.

குறிப்பாக பேச முடியாத வார்த்தைகள் எல்லாம் பேசி பிரச்சனையில் சிக்கி கேஸ் போலீஸ் ஸ்டேஷன் ஜெயில் என்றெல்லாம் சென்றிருந்தார். இதற்காக தண்டனை எல்லாம் அவர் பெற்றிருந்தார். கொரோனா காலத்தில் பீக்கில் இருந்தவர் சூர்யா தேவி. பின் சில வருடங்களாக இவர் அமைதியாக இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது இவர் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது பணம் மோசடி புகாரை அளித்திருக்கிறார்.

நாஞ்சில் விஜயன் மீது புகார்:

இது தொடர்பாக அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று நாஞ்சில் விஜயன் மீது புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நாஞ்சில் விஜயன் எனக்கு நீண்டகாலமாக நண்பராக இருந்தவர். இதனால் நான் அவருக்கு 2,10,000 ஐ கடன் வாங்கி கொடுத்தேன். ஆனால், அவர் திருப்பி தராமல் இழுத்தடித்துக் கொண்டு வருகிறார். தன்னுடைய தங்கையின் திருமண செலவிற்கு தேவைப்படுவதாகவும் மூன்றே மாதங்களில் திருப்பித் தருவதாகவும் சொல்லி தான் விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து பணத்தை கொடுத்தேன்.

சூர்யா தேவி பேட்டி:

பல வருடங்களாக பணத்தைக் கேட்டு நானும் அலைந்து கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர் கடந்த மாதம் மதுரையில் தனியார் திருமண மண்டபத்தில் ஒரு எக்ஸ்போ நடப்பதாகவும் அதில் வந்து தன்னை சந்திக்குமாறு நாஞ்சில் விஜயன் சொன்னார். அங்கு சென்று நான் பணத்தை கேட்டேன். ஆனால், அவர் என்னை ரொம்பவே மோசமாக பேசியதோடு சில பேரை வைத்து என்னை மிரட்டினார். அந்த சம்பவத்தை நான் வீடியோவாக பதிவு செய்து இருக்கிறேன்.

புகாரில் சொன்னது:

அது மட்டும் இல்லாமல் என்னை நாஞ்சில் விஜயன் தாக்கி இருக்கிறார். அதனால் சட்டப்படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வி.ஜே.வைஷு தொடர்பான விவகாரத்தில் நாஞ்சில் விஜயன் மீது புகார் அளிக்கும்போது வைசுவை ஆப் செய்ய முடியுமா? என்று நாஞ்சில் விஜயன் என்னிடம் கேட்டார் என்றும் இந்த புகாரில் சூர்யா தேவி குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு நாஞ்சில் விஜயன் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full