மிக்ஜாம் புயல் : முதல் ஆளாக முன்வந்து கார்த்தி - சூர்யா அளித்த நிதியுதவி. எவ்வளவு தெரியுமா?

By subhashini · 5/12/2023

கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையே மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு கொண்டு வருகிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டினுள்ளர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.

இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. அதோடு புறநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளங்களில் எல்லாம் தண்ணீர் புகுந்துள்ளது.

மிக்ஜாம் புயல்:

இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னையினுடைய பல தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இதனால் போக்குவரத்து வசதிகளும் ஸ்தம்பிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் மழையுடன் சேர்ந்து பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்தும் கீழே விழுந்து இருக்கின்றது. இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மீட்பு பணி:

சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளையும் செய்து வருகிறார்கள். மெரினா, பெசன்ட் நகர், எண்ணூர், பழவேற்காடு போன்ற பட இடங்களில் கடல் கொந்தளிப்புடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆகவே, தொடர் மழை பெய்து கொண்டிருப்பதால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதோடு வரலாறு காணாத மழை என்பதால் விமான, ரயில், பேருந்து என அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கி போயிருக்கிறது.

அரசாங்கம் நடவடிக்கை:

மேலும், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் போன்ற பலருமே நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா- கார்த்தி ஆகிய இருவரும் இணைந்து முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாயை நிதி உதவியாக அளித்திருக்கிறார்கள்.

https://twitter.com/FridayCinemaOrg/status/1731900585325027633

சூர்யா-கார்த்தி செய்த உதவி:

இதை அவர்கள் ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, அத்தியாவசிய தேவைகள் வழங்க அறிவுத்திருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இவர்களை அடுத்து பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full