மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் கல்லறைக்கு நேரில் சென்று தன் இரங்கலை தெரிவித்துள்ளார் சூர்யா. கன்னட திரையுலகில் பவர்ஸ்டாராக கொடி கட்டி பறந்தவர் புனீத் ராஜ்குமார். கன்னட மொழியில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் இவர் 15 பள்ளிகளை நடத்தி அதில் அனைவருக்கும் இலவச கல்வியை கொடுத்திருக்கிறார். அதேபோல 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலை போன்றவை தன்னுடைய சொந்தப் பணத்திலேயே மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல்இவர் 1800 மாணவர்கள் படிப்பதற்காக கல்வி வழிவகை செய்துள்ளார். இப்படி இலவச பள்ளிகள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என கர்நாடக மக்களுக்காக இவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

Advertisement

அவ்வளவு ஏன் இறுதியாக அவர் இறந்த போது கூட அவர் கண்ணை தானாம் செய்துவிட்டு தான் சென்றார். அதுவும் அவர் தானமாக வழங்கி சென்ற கண்களை கொண்டு 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா, புனீத் ராஜ்குமாரின் கல்லறைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது அவர் புனீத் ராஜ்குமாரின் கல்லறை முன் நின்று கண்ணீர்விட்டு தன் இரங்கலை தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா, ’’புனித் மரணம் என்பது நடந்திருக்கக்கூடாத ஒன்று. அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. என் குடும்பமும் அவரது குடும்பமும் ஆரம்பகாலத்திலிந்து நெருக்கமானது.

Advertisement

நான் என் தாயின் வயிற்றில் 4 மாத கருவாக இருந்தபோது அவரும் அவரது தாயார் வயிற்றில் 7 மாத கருவாக இருந்ததாக எனது தாய் கூறியிருக்கிறார். எப்போது சிரித்த முகத்துடனே இருக்கும் அவர், ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அவர் மரணமடையவில்லை நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமையை கொடுக்க வேண்டுகிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார் சூர்யா.

Advertisement
Advertisement