டாக்டர் ஆகணும். 10 வருடத்திற்கு முன் விஜய் டிவியில் சூர்யாவிடம் கேட்ட சிறுவன். இன்று மருத்துவர். புகைப்படம் இதோ.

By Rajkumar · 24/7/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது தம்பி கார்த்திக்கும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர்களது அப்பா சிவகுமார் ஒரு நடிகர். இவர்களது குடும்பமே கலை குடும்பம். சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் வந்த காப்பான் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமும் தயாராகி வருகிறது. இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகிறார்.

https://www.youtube.com/watch?v=wK_KUKW5_Oo

விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க முடியாத நிலையில் வாழ்க்கையில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவுவது போன்ற பல நற்பணிகளை செய்து கொண்டு வருகிறார்.2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம் அறக்கட்டளை. தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம். சமூக தீமைகளை நீக்குவதற்கும், அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நிறுவனர் நடிகர் சூர்யா சிவகுமார் ஆவார்.

இதற்கு சினிமா பிரபலங்கள் சார்பாகவும், அரசியல் சார்பாகவும் பலர் இந்த அகரம் அறக்கட்டளைக்கு ஆதரவு கொடுத்து வந்து உள்ளார்கள்.இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யாவின் உதவியால் தற்போது கூலித் தொழிலாளியின் மகன் ஒருவர் மருத்துவராக மாறி இருக்கிறார். 10 வருடம் முன் நிகழ்ந்த சம்பவம் ஆகும் இது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யா சார்பாக அகரம் மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஆகும்.

இதே நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்த குமார் என்பவர் கலந்து கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியில் சூர்யாவிடம் உதவி கேட்டு இருந்த நந்தகுமார் நான் தற்போது இரண்டாம் வகுப்பு படித்திருக்கிறேன் என்னுடைய மதிப்பெண் 1160 எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை ஆனால் எனக்கு வசதி இல்லை என்று கூறி இருந்தார். பின்னர் நந்தகுமாரின் பெற்றோரிடமும் அந்த நிகழ்ச்சியில் பேசினார் சூர்யா. கூலி வேலை பார்த்து சத்தான உணவை சாப்பிட்டு இத்தனை கஷ்டத்திலும் நந்தகுமார் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் அந்த மேடையில் நடிகர் சூர்யா உங்கள் பையன் கண்டிப்பாக டாக்டர் படிப்பான் என்று உறுதியளித்திருந்தார். தற்போது அவர் சொன்னது போலவே அந்த மாணவருக்கு சென்னை எம் எம் சி மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்து அவர் படித்து முடிக்கும்வரை அத்தனை செலவையும் சூர்யாவின் அகரம் கட்டளையை ஏற்று இருக்கிறது. தற்போது நந்தகுமார் மருத்துவம் படித்துவிட்டு பெரம்பலூரில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன்னர் கூலித் தொழிலாளியின் மகனாக இருந்த நந்தகுமார் தற்போது மருத்துவர் ஆக மாறியிருக்கிறார். சூர்யா செய்திருக்கும் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்

Tamil Behind Talkies AMP · Quick view
View full