சூர்யா NGK படத்தின் ரிலீஸ் தேதி இந்த திருநாள் அன்றா..!ரசிகர்கள் கொண்டாட்டம்..!

By Rajkumar · 14/12/2018

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தின் நடிகர் சூர்யா “என்ஜிகே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு இந்த இந்த படத்தின் ஆரம்ப தகவல்கள் வெளியாகின.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ட்ரீம் வாரிர்ஸ் பிக்சர் இந்த படத்தை தயாரித்துள்ளது. நீண்ட நாட்களாக மந்தமாக இருந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது.

சூர்யா ரசிகர்களும் படத்தின் புகைப்படங்கள் மற்றும் டிரெய்லரை எதிர்பார்த்து காத்து இருந்தனர். தற்போது படப்பிடிப்புகள் கேரளா மாநிலம் கொச்சினில் நடைபெற்று வருகிறது.

நீண்ட நாட்களாக பட மாக்கப்பட்டு வரும் இந்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil Behind Talkies AMP · Quick view
View full