Airportகளில் இப்படி ஒரு பிஸ்னஸ் - பல கோடிகள் சம்பாதிக்கும் சூர்யா. என்ன தெரியுமா ?

By Rajkumar · 23/8/2022

நடிகர் சூர்யா அவர்கள் புதிய தொழில் மூலம் பல கோடி அளவில் சம்பாதிக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. சமீபத்தில் தான் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

சூர்யா மற்றும் பாலா கூட்டணி:

தற்போது சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே, பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

சூர்யா நடிக்கும் படங்கள்:

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதற்கான பணிகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். பின் இவர் 'சூர்யா 42' என்ற பெயரிடாத படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இப்படி சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தேசிய விருது வாங்கிய சூர்யா:

சமீபத்தில் கூட டெல்லியில் நடந்த 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சூரரை போற்று படத்திற்காக சூர்யா வென்று இருக்கிறார்.மொத்தம் 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது சூரரைப்போற்று திரைப்படம். இதனால் பலரும் சூர்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் விமான நிலையம் மூலம் நடிகர் சூர்யா அவர்கள் பல கோடி அளவில் சம்பாதிக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.

பல கோடி சம்பாதிக்கும் சூர்யா:

சூர்யா அவர்கள் நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த தொழில் அதிபராகவும் விளங்கி வருகிறார். மும்பையில் ஒரு முக்கிய தொழிலில் 200 கோடி ரூபாய் நடிகர் சூர்யா முதலீடு செய்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை, மதுரை, திருச்சி, மும்பை, பெங்களூரு என முக்கிய ஊர்களில் உள்ள விமான நிலையத்தில் பார்க்கிங் காண்ட்ராக்ட்டை நடிகர் சூர்யா எடுத்திருக்கிறார். இதன் மூலம் சூர்யாவிற்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full