மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை - ஜோதிகாவிற்காக சூர்யா வெளியிட்ட அறிக்கை.

By Rajkumar · 28/4/2020

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா அஜித் விக்ரம் சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் நடித்த ஜோதிகா தற்போது தனது இரண்டாவது இன்னிங்சிலும் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பி வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வளைதளத்தில் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது. ஜோதிகா கருத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் பலர் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/BHUVAN_SURIYA/status/1252914747906768897

இது ஒரு புறம் இருக்க ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தால்' திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிட போவதாக அறிவித்தவுடன் தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர்கள் இனி ஜோதிகா படத்தை திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்று கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசிய விவகாரத்தில் ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போது ஜோதிகா அவர்கள் பேசியது இப்போது ஊடகங்களில் செய்தியாக உன் சமூக ஊடகங்களில் விவாதமாக மாறி இருக்கிறது.

கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. சிந்தனைகளை காது கொடுத்து கேட்ககாதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

அறிஞர்கள் ஆன்மிகப் பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தின் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு தரைகுறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நல்லோர்கள் நண்பர்கள் ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள் முகம் அறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதிலளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில்இதனை கையாண்டனர் நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்க செய்கிறார்கள் எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full