தன் பிள்ளைகளை போட்டோ எடுக்க அனுமதிக்காத சூர்யா, போட்டோகிரப்பர்ஸ் வைத்த வேண்டுகோளை ஏற்று செய்த செயல்.
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தா படமும் மக்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்றுள்ளது.சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் அடுத்த படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து குடும்பத்துடன் ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்ற சூர்யாவை மற்றும் அவர் குடும்பத்தினரை செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு தொந்தரவு செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா – பாலா கூட்டணியில் உருவான படம்:
இதனை தொடர்ந்து சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூர்யா – பாலா கூட்டணியில் படம் ஒன்று உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். நந்தா திரைப்படம் சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்து இருந்தது. அதே போல் கடைசியாக பாலா அவர்கள் ஜோதிகாவை வைத்து நாச்சியார் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா– பாலா கூட்டணி:
பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் சூர்யாவின் 41வது திரைப்படம் ஆகும். மேலும், இந்த படத்திற்காக மதுரையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமில்லாமல் சூர்யாவுடன் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் பூஜை கன்னியாகுமரி மாவட்டத்தில் போடப்பட்டது. அப்படியே படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்தது.
https://twitter.com/BollywoodMDB/status/1557265576178827264
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ;
இதையடுத்து சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் ட்விட்டர் ஒன்று போட்டுஇருந்தது.அதில், இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் 34 நாட்கள் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற இருக்கிறது. அதுவும் கோவாவில் இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்கான செட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் ஜூன் மாதத்தில் கோவாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பாலாவின் பிறந்தநாளான இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.
ப்ளீஸ் என் மகன் மகளை போட்டா எடுக்காதீங்க :-
சமீபத்தில் நடிகர் சூர்யா அவர் மனைவி ஜோதிகா அவருடைய இரு குழந்தைகள் திவ்யா மற்றும் தேவ் என எல்லோரும் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக ஹோட்டல் ஒன்றுக்கு சென்று இருந்தார்கள். அவர்கள் திரும்பும் போது அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் அவர்களை தொந்தரவு செய்யுமாறு வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் கோபமடைந்த சூர்யா எனது மகன் மகளே மட்டும் போட்டோ எடுக்காதீர்கள் ப்ளீஸ் என என கேட்டார்.
அதற்கு அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் நீங்கள் மற்றும் ஜோதிகா மேம் ஒரு போட்டோ கொடுங்கள் என்று கேட்டார். சூர்யா சற்று கோபமாக இருந்தாலும் தன் மகன், மகளை காரில் ஏற்றி விட்டு. அவர்கள் கேட்டுக் கொண்டவரே சூர்யாவும் அவர் மனைவியும் ஜோதிகாவும் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தனர் இந்த வீடியோ தற்சமயம் இணையத்தில் மிகவும் வைரலாக வருகின்றது. அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்கை என்று உள்ளது என கருத்து தெரிவிக்கின்றனர்.