என்னை பற்றி நிறை ட்ரோல், நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து இருக்கு, ஆனால் - சூர்யா சேதுபதி ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். இவருடைய கருத்துக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ‘மகாராஜா’ படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்திருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான தலைவன் தலைவி படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலும் செய்து இருக்கிறது. தற்போது இவர் மிஸ்கின் இயக்கும் படம், வேறு சில படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார்.
சூர்யா சேதுபதி குறித்த தகவல்:
இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய அப்பாவின் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
அந்த வகையில் சூர்யா முதன் முதலில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை அடுத்து சிந்துபாத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விடுதலை 2 படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.
பீனிக்ஸ் படம்:
இவர் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் வெளிவந்த ‘Pheonix வீழான்’ என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். கடந்த மாதம் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ் சமயத்தில் சூர்யா சேதுபதி அளித்திருந்த பேட்டி எல்லாம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டிருந்தது. அதற்கெல்லாம் சூர்யா சேதுபதியும் பொறுமையாக விளக்கமும் கொடுத்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சூர்யா சேதுபதி, எல்லா இடத்திலுமே நெகட்டிவான விஷயங்கள் தான் நிறைய இருக்கிறது.
சூர்யா சேதுபதி பேட்டி:
அதை நம்மால் தடுக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் இந்த பிரச்சினையை எதிர்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்படி கையாள்வது என்பதை தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மாதிரியான விஷயங்களால் உங்கள் மனம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் இதை பெரிதாக மனதில் எடுத்துக் கொள்ளவில்லை. நான் ஏதாவது தவறு செய்தாலும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பேன். ஏன் இப்படி செய்தேன் என்று நினைத்து என்னை நானே துன்புறுத்திக் கொண்டது கிடையாது. அதில் எனக்கும் நம்பிக்கையும் இல்லை.
விமர்சனங்களுக்கு பதிலடி:
பீனிக்ஸ் படத்தை பார்த்து பலரும் பாராட்டிருந்தார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நிறைய பேர் பாசிட்டிவான விஷயங்களை எல்லாம் சொன்னதை பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது. அந்த பாராட்டு தான் எங்களுடைய உழைப்புக்கு கிடைத்த பலன். நான் பல பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்க விரும்புகிறேன். பார்வையாளர்கள் திரையரங்களில் செலவிடும் 2:30 மணி நேரத்தையும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் தான் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். தவறுகள் செய்தாலும் அடுத்த படத்தில் அவற்றை திருத்திக் கொள்வேன். வேறு மொழிகளை கற்று அந்த துறைகளில் பணியாற்றி என் குரலில் டப்பிங் செய்ய விரும்புகிறேன் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.