விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் 'பீனிக்ஸ் வீழான்' படம் வீழ்ந்ததா? உயர்ந்ததா? முழு விமர்சனம் இதோ

By subhashini · 4/7/2025

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பீனிக்ஸ். இந்த படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கி இருக்கிறார். இவர் ஸ்டண்ட் மாஸ்டர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க ஆக்சன் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் சூர்யா சேதுபதி சென்னை கடலோரப் பகுதியில் வாழ்ந்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் எம்எல்ஏ சம்பத்தை கொலை செய்து விடுகிறார். அப்போது சூர்யாவிற்கு 17 வயது என்பதால் அவரை சிறுவர் ஜெயிலில் அடைக்கிறார்கள். சம்பத்தின் மனைவிதான் வரலட்சுமி சரத்குமார். இவர் தன்னுடைய ஆட்களை வைத்து சூர்யா சேதுபதியை கொல்ல முயற்சி செய்கிறார். இதிலிருந்து சூர்யா தப்பித்தும் விடுகிறார். தொடர்ந்து வரலட்சுமி விடாமல் சூர்யாவை கொலை செய்ய முயற்சி கொண்டிருக்கிறார்.

இறுதியில் சூர்யா சேதுபதி கொலை செய்யப்பட்டாரா? எம்எல்ஏ சம்பத்தை சூர்யா கொலை செய்ய காரணம் என்ன? இந்த பிரச்சனைகளில் இருந்து சூர்யா தப்பித்தாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தில்
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் தான் இருந்திருக்கிறது. அதனால் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளிலுமே சூர்யா ஸ்கோர் செய்திருக்கிறார். இந்த படத்திற்காக இவர் உடல் எடை குறைப்பது, சண்டை பயிற்சிகளை கற்றுக் கொள்வது என்று நிறையவே உழைத்திருக்கிறார்.

அதை படத்தில் பார்க்க முடிகிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். ஆனால், ஒரு சின்ன பையன் ஒரே சமயத்தில் ஒரு 50 பேரை அடித்து நொறுக்குவது என்பது கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். கதைக்கு அது சரியாக இருந்தாலும் பார்வையாளர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? என்பது தான் தெரியவில்லை. படத்தில் எல்லா நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=b529VjQkbS4

இயக்குனருமே நடிகர்களை சிறப்பாக தேர்வு செய்து வைத்திருக்கிறார். வரலட்சுமி, சம்பத் ஆகியோர் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதேபோல் இயக்குனர் படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஆக்சனை தெறிக்க விட்டிருக்கிறார். இது வழக்கமான பழிவாங்கல் கதைக்களமாக இருந்தாலும் அதை இயக்குனர் கொஞ்சம் ஆக்ஷன் ஓட கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. அதோடு சில வசனங்களை எமோஷனலாகவும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு பெரிய பலமே பின்னணி இசை தான். ஹீரோவுடைய என்ட்ரி, வில்லன் என்ட்ரி, சண்டை காட்சிகள் என அனைத்திலுமே பின்னண இசை பக்காவாக பொருந்தி இருக்கிறது.
முதல் பாதி முழுவதும் நிறைய சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கிறது. இரண்டாம் பாதி தான் கதைக்குள் நகர்கிறது. அதை இன்னும் கொஞ்சம் தெளிவாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் படம் ஓகே தான். ஒரு முறை சென்று தியேட்டரில் பார்க்கலாம்.

நிறை:

சூர்யா சேதுபதியின் நடிப்பு

கதைக்களம் ஓகே

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

சண்டைக் காட்சிகளை தெறிக்க விட்டிருக்கிறார்கள்

குறை:

முதல் பாதி முழுவதுமே சண்டை

படம் முழுக்க சண்டை காட்சிகளாகவே இருக்கிறது

சில வசனங்கள் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

சில காட்சிகளை இயக்குனர் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாம்

மொத்தத்தில் பீனிக்ஸ் - முயற்சி

Tamil Behind Talkies AMP · Quick view
View full