உள்ளுக்குள் வெளிய சொல்ல முடியாத அளவுக்கு அவ்ளோ ப்ரச்சனை இருக்கு - சூர்யா சேதுபதி சொன்னது
பீனிக்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். இவருடைய கருத்துக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது.
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ‘மகாராஜா’ படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்திருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான ஏஸ் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் மிஸ்கின் இயக்கும் ட்ரெயின், வேறு சில படங்களிலும் கமிட்டாகி வருகிறது.
சூர்யா சேதுபதி குறித்த தகவல்:
இது ஒரு பக்கம் இருக்க, தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய அப்பாவின் பல படங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் சூர்யா முதன் முதலில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை அடுத்து சிந்துபாத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பீனிக்ஸ் படம்:
இதனை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விடுதலை 2 படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தனியாக ஹீரோவாக நடித்து இருக்கிறார். இவர் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘Pheonix வீழான்’ என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு சாம்.சி எஸ் இசையமைக்கிறார். இந்த படம் ஜூலை நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது.
விழாவில் சூர்யா சேதுபதி:
இந்த விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி, இந்த இரண்டு வருடத்தில் நிறைய சர்ச்சைகள், ஷூட்டிங், படம் ரிலீஸ் ஆகுமா? என்ற பயம் என நிறைய பிரச்சனைகள் இருந்தது. ஆனால், இதிலிருந்து நான் ஒன்றுதான் கற்றுக் கொண்டேன். ஒவ்வொன்றையும் நான் பாடமாக எடுத்துக் கொண்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் இன்றைக்கு இங்கு இருக்க காரணம் பிரஸ், சக நடிகர்கள், குடும்பம், நண்பர்கள் தான். இன்னும் எட்டு நாளில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது . என்னுடன் நடித்த தேவதர்ஷினி மேம், சம்பத் சார், முத்துக்குமார் அண்ணா எல்லோருக்குமே இந்த தருணத்தில் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
https://www.youtube.com/watch?v=OwBcEuTAwoI
படம் பற்றி சொன்னது:
நான் எப்போதுமே ரொம்ப வீக்காக ஃபீல் பண்ணி இருக்கிறேன். அந்த சர்ச்சைகள் வந்த பிறகு நாம் ஸ்ட்ராங்கா பண்ணிடுவோமா? என்ற குழப்பமும் இருந்து கொண்டு இருக்கும். உள்ளே வீக்காக ஃபீல் பண்ணினாலும் அதை யாரிடமும் காட்டிக் கொள்ள மாட்டேன். ஆனால், கூட நடித்தவர்கள் அதை புரிந்து கொண்டு ஒவ்வொரு சீனிலும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். முக்கியமாக தேவதர்ஷினி மேம் அவர்கள் படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்தில் எனக்கு அம்மா தான். என்னுடைய தயாரிப்பாளர் ராஜலட்சுமி மேம் இந்த சர்ச்சைகள் நடந்த போது அவர்கள் என்னை ஜட்ஜ் பண்ணி இருக்கலாம் ஆனால் அவர்கள் அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லாமல் உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தது என்னுடைய குரு அனல் அரசு சார் தான். ஜூலை 4ஆம் தேதி படம் வருகிறது. உங்கள் கருத்துக்களை கேட்க நானும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.