மீண்டும் தாமதமாகும் என் ஜி கே..!கடுப்பாகி செல்வராகவனை கடிந்த சூர்யா..!

By Rajkumar · 15/12/2018

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தின் நடிகர் சூர்யா “என்ஜிகே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு இந்த இந்த படத்தின் ஆரம்ப தகவல்கள் வெளியாகின.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ட்ரீம் வாரிர்ஸ் பிக்சர் இந்த படத்தை தயாரித்துள்ளது. நீண்ட நாட்களாக மந்தமாக இருந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது.

சூர்யா ரசிகர்களும் படத்தின் புகைப்படங்கள் மற்றும் டிரெய்லரை எதிர்பார்த்து காத்து இருந்தனர். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் கேரளா மாநிலம் கொச்சினில் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை எப்படியாவது அடுத்த மாதத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்று சூர்யா ஒரே முடிவாக இருக்கிறாராம். ஆனால், செல்வராகவன் தாமதத்தால் படம் இன்னும் நிறைவடையத்தால் கடுப்பில் இருந்து வரும் சூர்யா படத்தை விரைவில் முடியுங்கள் என்று செல்வராகவனிடம் கடிந்துள்ளாராம்.  

behindtalkies AMP · Quick view
View full