நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் வெளியாகியுள்ள 'சூர்யா சாட்டர்டே' எப்படி இருக்கிறது- முழு விமர்சனம் இதோ

By Rajkumar · 30/8/2024

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் 'சூர்யா சாட்டர்டே'. இவர்கள் இருவருடைய கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த 'அடடே சுந்தரா' என்ற படம் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா சாட்டர்டே படத்தில் நாணியுடன் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். அதேபோல் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா களமிறங்கியுள்ளார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த இப்படம் மக்கள் மனதில் இடம் பிடித்ததா? இல்லையா ? என்பதை பார்ப்போம்.

கதைக்களம்:

படத்தில், ஹீரோ நானி(சூர்யா) தனது சிறு வயதில் இருந்தே மிகவும் கோப சுபாவம் கொண்டவர். எங்கு போனாலும் அடிதடி என்று இருக்கிறார். தனது மகனைக் குறித்து வருத்தப்படும் நானியின் தாய், தான் இறக்கும் தருவாயில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் உன் கோபத்தை காட்டு என சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்து போகிறார். அதனால், வாரத்தில் ஆறு நாட்கள் தான் பார்க்கும் தவறுகளை எழுதி வைத்துக் கொண்டு, சனிக்கிழமை மட்டும் சென்று அவர்களை நானி அடிக்கிறார். இது போல் செல்லும் நானியின் வாழ்க்கையில், கதாநாயகி பிரியங்கா மோகின் நட்பு கிடைக்கிறது.

இப்படத்தில் பிரியங்கா மோகின் போலீசாக இருக்கும் அதே ஸ்டேஷனில் எஸ்.ஜே. சூர்யாவும்(தயா) இன்ஸ்பெக்டராக இருக்கிறார். மேலும் எஸ்.ஜே சூர்யா தனக்கு கோபம் வரும்போது எல்லாம் தனது சொந்த ஊரான சோகுல பாலம் மக்களை கொடூரமாக அடித்து தனது கோபத்தை தணித்துக் கொள்கிறார். இந்நிலையில், நானிக்கு பிரியங்கா மோகன் மூலம் சோகுல பாலம் மக்களிடம் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அதற்குப் பிறகு அந்த மக்களுக்காக எஸ்.ஜே.சூர்யாவிடம் நானி மல்லு கட்டுவதே மீதிக்கதை.

தெலுங்கில், 'சரிபோதா சனிவாரம்' என்றும் தமிழில் 'சூர்யா சாட்டர்டே' என்றும் இந்த படம் வெளியாகி உள்ளது. படத்தின் ஆரம்பத்தில் 20 நிமிடங்கள் ஹீரோ ஏன் சனிக்கிழமை மட்டும் சண்டை போடுகிறார் என்பதை கட்டமைக்கவே ரொம்ப நேரத்தை இயக்குனர் எடுத்துக் கொண்டது இழுவையாக இருக்கிறது. முதல் பாகத்தில், எடிட்டர் கார்த்திக் ஸ்ரீனிவாஸ் கருணை காட்டாமல் கத்தரி போட்டிருந்தால் நிச்சயம் படத்தின் முதல் பாகம் இவ்வளவு இழுவையாக இருந்திருக்காது. மேலும், படத்தில் எஸ்.ஜே.சூர்யா என்ட்ரிக்கு பிறகு சிறிது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் ஹீரோ நானிக்கு ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை கொடுக்கும் பில்டப் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.

அதேபோல் படம் ஒரு யுனிக் கான்செப்ட் என்றாலும் நானி முகத்தை கூட மூடாமல் ஒவ்வொருவரையும் சனிக்கிழமை அடிக்கிறார். ஆனால், ஒருவர் கூட அடுத்த நாள் வந்து நானியை அடிக்க மாட்டார்கள். ஹீரோ மட்டும் தானே அவரின் அம்மாவுக்கு சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறார். ஆனால், நீங்கள் யாருக்கு சத்தியம் செய்தீர்கள். அடுத்த நாளே வந்து அவரை அடிக்காமல் அடுத்த சனிக்கிழமை வரை காத்திருப்பது போல் வரும் காட்சிகளில் சுத்தமாக லாஜிகே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் நடிகர் பிரியங்கா மோகனை அழகாக காட்டியிருக்கும் இயக்குனர், அவரின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

நிறை:

நானி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பு

இரண்டாம் பாகம் சுறுசுறுப்பு

பின்னணி இசை ஓகே

குறை:

முதல் பாதி ஆமை போல் நகர்ந்தது

படத்தில் லாஜிக்கே இல்லை

எடிட்டிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம்

வலுவற்ற திரைக்கதை

மொத்தத்தில் சூர்யா சாட்டர்டே படம் 'சுமார்'

behindtalkies AMP · Quick view
View full