தயவு செய்து விமர்சனம் என்ற பெயரில் ஒரு படத்தை கொல்லாதீர்கள் - இயக்குநர் சுசீந்திரன் ஆவேசம்
மார்கன் படத்தின் நன்றி விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ ‘ஹிட்லர்’ போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது விஜய் ஆண்டனி அவர்கள் ‘சக்தி திருமுருகன்’ என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே நடித்தும் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை அருண் பிரபு இயக்கி இருக்கிறார்.
மார்கன் படம்:
இந்த படத்திற்கான வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. இதை அடுத்தடுத்து பல படங்களில் விஜய் ஆண்டனி கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் ஆண்டனி விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் மார்கன். இந்த படத்தை லியோ ஜான் பால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, பிரகிடா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
நன்றி விழா:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய இயக்குனர் சுசீந்திரன், எதைப் பார்க்க வேண்டும், எதை பார்க்க வேண்டாம் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தயவு செய்து ஒரு படத்தை பற்றி விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் அதை கொள்ளாதீர்கள்.
விழாவில் சுசீந்திரன் பேசியது:
சமீபத்தில் வெளியான கண்ணப்பா திரைப்படத்தை யூடியூபர்கள் யாரும் விமர்சிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் படக்குழுவினர் கேஸ் போட்டு இருந்தார்கள். அதன் பின் படக்குழுவினர் தடை உத்தரவும் வாங்கி இருந்தார்கள். அந்த அளவிற்கு இப்போது சினிமாவின் நிலைமை இருக்கிறது. ஆனால், விமர்சனங்கள் இல்லை என்றாலும் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் மக்கள் மத்தியில் சென்று அடையாது.
சுசீந்திரன் சொன்ன அட்வைஸ்:
அதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படாத அளவிற்கு விமர்சனம் செய்யுங்கள். ஒருவரின் பொய்யான விமர்சனத்தால் பல பேருடைய உழைப்பு பறிக்கப்படுகிறது. மேலும், மார்கன் படம் நன்றாக இருக்கிறது. விஜய் ஆண்டனி நன்றாக செய்து இருக்கிறார். படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறுகிறார்.