சாதி படம் எடுக்கும் அவங்க அந்த வெட்டுபட்ட மாணவனுக்கு ஒரு 5 லட்சம் கொடுப்பார்களா ? - எஸ்.வி.சேகர் கேள்வி

By Rajkumar · 13/8/2023

நாங்குநேரி சம்பவம் குறித்து நடிகர் எஸ் வி சேகர் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கூலி தொழில் செய்கிறார். இவருக்கு 17 வயதில் சின்னத்துரை என்ற மகனும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை.

https://www.youtube.com/watch?v=vZPVsyiP5Fw

இதனால் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது சில மாணவர்கள் தன்னை தாக்கி இருப்பதாக கூறியிருக்கிறார். பின் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவனும், அவருடைய தங்கையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து இருவரையும் அரிவாளால் சாரா மாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டியிருக்கிறார்கள். இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.

நாங்குநேரி சம்பவம்:

இது தொடர்பாக நாங்குநேரி போலீசாருக்கு மக்கள் தகவல் அளித்தும் போலீஸ் வரவில்லை. இதை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார்கள். மேலும், இந்த சம்பவம் நாங்குநேரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் போலீசும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் தங்கை இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின் போலீஸ் விசாரணையில், சின்னத்துரை மாணவன் படிக்கும் பள்ளியில் சில சீனியர் மாணவர்கள் அவரை தொந்தரவு செய்திருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=9-hXawJ1u8Q

போலீஸ் விசாரணை:

இது குறித்து அவர் பெற்றோரிடமும் தலைமை ஆசிரியர் இடம் கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர்கள் அந்த மாணவனின் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவு தெரிகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். சாதி வன்மத்தால் தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இதில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் பேட்டி அளித்து இருக்கிறார்.

எஸ்.வி.சேகர் அளித்த பேட்டி:

அதில் அவர், சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்கிறோம். ஆனால், நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவனை அவனது வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து வெட்டி இருக்கிறார்கள். சாதியை ஒழிக்கணும் என்று பேசுறோம். ஆனால், பள்ளிக்கூடத்தில் குழந்தையை சேர்க்க போகும் போது என்ன சாதி என்று கேட்கிறார்கள். சின்ன வயதில் அந்தக் குழந்தைக்கு சாதின்னா என்னனு தெரிய தொடங்குது. இதைவிட முக்கியமான காரணம் சினிமா.

சாதி குறித்து சொன்னது:

சினிமாவில் அதிகமாக சாதி படங்களை எடுத்ததால் தான் இந்த வினை. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது இயக்குநர் முத்தையா தான். 'கொம்பன்' படத்தை எடுத்து இதை ஆரம்பித்து வைத்தது அவர் தான். அப்புறம் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் என பல இயக்குனர்கள் அதை தொடர்கிறார்கள். தன் சாதியை உயர்த்துவது தப்பு இல்லை. ஆனால், அடுத்த சாதியை தாழ்த்திக் காட்டுவது தான் தப்பு. இன்று சாதி படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அந்த வெட்டுப்பட்ட மாணவனுக்கு 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் கொடுப்பாங்களா? என்று கோபத்தில் கொந்தளித்து பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full