ஹீரோயினுக்கு தாலி கட்டுற சீன் என்கிட்ட சொல்லல, ஆனால் - நடிகர் எஸ்.வி சேகர் எக்ஸ்க்ளூசிவ்

By subhashini · 23/8/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.வி சேகர். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் மேடை நாடக கலைஞர், நகைச்சுவையாளர், இயக்குனர், அரசியல்வாதி என பன்முகங்களைக் கொண்டவர். இவர் மேடை நாடகத்தின் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதற்குப்பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது எஸ்.வி சேகர் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி சுந்தரம் என்ற தொடரில் சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் சீக்கிரமாகவே முடிவடைய இருக்கும் தகவல் தான் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் எஸ்.வி சேகர், நான் பத்து வயதில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போது என்னுடைய பயணம் 65 ஆண்டுகளை கடந்து விட்டது.

மீனாட்சி சுந்தரம் சீரியல்:

இந்த தொடரின் தயாரிப்பாளர் கர்ணா என்னுடைய நண்பர்தான். அவர் கேட்டுக் கொண்டதால் தான் நான் இந்த தொடரில் நடிக்க ஒத்துக்கொண்டேன். என்னை பொறுத்த வரைக்கும் நான் பண்ணுற கதாபாத்திரம் நான் போடுற ஷர்ட் மாதிரி. அதன் பிட்டிங் எனக்கு கரெக்டா இருந்தால் மட்டும்தான் அந்த கேரக்டரை ஏற்றுக் கொண்டு நடிப்பேன். இந்த சீரியல் ஆரம்பிக்கும் போது என்னிடம் சொன்ன கதையே வேற. சீரியல் தொடங்கும் போது நான், இது எனக்கான கதாபாத்திரம் கிடையாது. நான் விலகிக் கொள்கிறேன் என்று சொன்னேன்.

எஸ்.வி.சேகர் பேட்டி:

எனக்கும் ரஜினிகாந்த்துக்கும் 14 நாட்கள் தான் வயது வித்தியாசம். எனக்கு 75 வயதாகிறது. மதிய நேரத்தில் என்னுடைய பேரனை ஸ்கூலில் இருந்து அழைத்து வரணும். அப்படி இருக்கும் போது என்னால் 30 நாளும் ஓட முடியாது. மாதத்தில் 10 நாள் சூட், ரெண்டு நாள் டப்பிங். அது தான் எனக்கு செட் ஆகும்ன்னு சொன்னேன். ன்னுடைய நாடகத்துக்கும் கதை எழுதுபவர் தான் இந்த தொடருக்குமான கதையை எழுதினார். 102 எபிசோட்டில் தொடர் முடிகிறது. இது என்னோட முடிவு கிடையாது. நான் முடிவு பண்ற இடத்திலும் இல்லை. சீரியல் முடியப்போகுதுன்னு சொன்னதுமே செட்டில் எல்லோருமே ரொம்ப பதறினார்கள்.

https://www.youtube.com/watch?v=S0mg8IKQ4zk&t=7s

சீரியல் முடிய காரணம்:

ஒருவர் என்னிடம், நீங்கள் இருக்கீங்க சீரியல் எப்படியும் ரெண்டு மூணு வருஷத்தில் நல்லா போகும் நினைத்தோம்னு கூட சொன்னார்கள். யார் என்னை சபித்தாலும் எனக்கு அது பலிக்காது. ஏன்னா, சீரியல் முடியும் என்பது என்னுடைய முடிவு கிடையாது. இப்ப கூட மீனாட்சி சுந்தரம் 2 கதை ரெடியா இருக்கு. கலைஞர் டிவி அதை வேண்டாம் என்று சொன்னால் மட்டும்தான் வேற சேனலுக்கு கொடுக்க முடியும். இந்த சீரியல் பொறுத்த வரைக்கும் யாரும் கெட்டவர்கள் கிடையாது. சந்தர்ப்பம் சூழ்நிலை தான் அவர்களை அப்படியான நிலைக்கு கொண்டு போகிறது.

தாலி கட்டும் சீன் காரணம்:

கலைஞர் டிவி நம்பர் 1 சேனல் கிடையாது. இதுவே சன் டிவியில் இந்த சீரியல் வந்து இருந்தால் வேற மாதிரியான ரீச். இருந்தும் கலைஞர் டிவியில் இந்த தொடருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது எனக்கு சந்தோசம். மேலும், இந்த சீரியலில் என்னைவிட 40 வயது குறைவான பொண்ணுக்கு தாலி கட்டுற சீன் இருப்பதை சொல்லவே இல்லை. அதற்கு பிறகு தான் தாலி கட்டுற சீனை ஒரு விபத்து மாதிரி செட் பண்ணி எடுத்தார்கள். இனி வரப்போகிற எல்லா தொடர்களுமே 100 எபிசோடு தான் வரப்போகிறது. அதற்கான முன்னோட்டம் தான் இந்த தொடர் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full