ஆயில் மசாஜ் ஆர்வத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.வி.சேகர்.

By Manikandan · 23/12/2022

தென்னிந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகரான எஸ். வி சேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் 1974ஆம் ஆண்டு நாடகப்பிரியா என்ற ஒரு நாடக குழுவை நிறுவினார். மேலும் 24 நாடகங்களை இவரே தயாரித்திருக்கிறார்.

அதோடு அமெரிக்கா, கனடா, துபாய், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, பாங்காங் போன்ற பிற நாடுகளிலும் தன்னுடைய நாடகக்குழுவின் மூலம் நாடகங்களை நடித்தி வெற்றி கன்டவர். மேலும் 5400 முறைகளுக்கும் மேலாக மேடையேறியுள்ளார். அதோடு வானொலி நிகழ்ச்சிகளில் தயாரிப்பு, நாடகம் சம்மந்தப்பட்ட விஷியங்களில் கைதேர்ந்தவர் என்று பாராட்டப்பட இவர் பல சர்ச்சைகளில் சிக்கி நீதி மன்றங்கள் வரை சென்று வந்துள்ளார்.

சமீபத்தி பாஜகா கட்சியிலும் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் அவ்வப்போது சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத கருத்துக்களை கூறி பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் 71 வயதாகும் இவர் சமூக வலைத்தளங்கில் மிகவும் ஆக்டிவாக அவ்வவ்போது சில கருத்துக்களை கூறி வருகிறார்.

இந்த நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள பத்தி ஓன்று அனைவரையும் ஆச்சிரியமடைய செய்துள்ளது. பொதுவாக உடல் ரிலாக்ஸ்க்காகவும், உடலில் வலி ஏற்படும்போதும் பலர் ஆயில் மசாஜ் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்றாக தற்போது இருந்து வருகிறது. ஆனால் எஸ் வி சேகர் ஆயில் மசாஜ் செய்ததினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ENT தனியார் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக எஸ் வே சேகர் தன்னுடைய முகப்பு பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் `என்னுடைய ஆர்வக் கோளாறினால்தான் இந்த விளைவு ஏற்பட்டுள்ளது. கடவுளின் அருளாளர் மற்றும் டாக்டர் மோகன் காமேஸ்வரனினால் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன். நாம் ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தை கற்றுக்கொள்கிரோம் என்று இனிமேல் NO MORE OIL MASSAGES என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full