முதலிரவு அறையின் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை. விமர்சிக்கும் ரசிகர்கள்.

By Rajkumar · 4/3/2023

சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் தன்னுடைய முதலிரவு அறையின் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் தனுஷ் பட நடிகை. தனுஷ் நடித்த "ராஞ்சனா" என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ஸ்வரா பாஸ்கர். இந்த படம் அம்பிகாபதி என தமிழில் டப் செய்யப்பட்டு வலியானது. இடபத்தில் கதாநாயகியாக சோனம் கபூர் நடிக்க இடண்டாவதி நாயகியாக நடித்திருந்தார். மேலும் நடிகை ஸ்வரா பாஸ்கர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர்.

அதே போல அடிக்கடி ஏதாவது ஒரு கருத்தை சொல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறார். குறிப்பாக தற்போது இந்திய நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி அரசை விமர்சித்து அதனால் பல முறை சோசியல் மீடியாக்களில் ட்ரோல்களுக்கு உள்ளக்கியுள்ளார். இந்த நிலையில் தான் நீண்ட நாள் காதலன் பஹத் அகமத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இருவரும் அதிகாராபூர்வமாக கடந்த 6ஆம் தேதி நீதிமன்றத்தில் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்து நேற்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக நடிகை ஸ்வரா பாஸ்கர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் தங்களுக்கு இடையே காதல் எப்படி நடந்தது என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் "சில சமயங்களில் உங்களுக்குப் பக்கத்தில் இருந்த ஒன்றை நீங்கள் வெகு தொலைவில் தேடுகிறீர்கள்.

நாங்கள் அன்பைத் தேடினோம், ஆனால் முதலில் நட்பைக் கண்டோம். பின்னர் நாங்கள் ஒருவரையொருவர் கண்டுபிடித்தோம்! என் இதயத்திற்கு வரவேற்கிறோம் என்று பதிவிட்டிருந்தார். கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டதிற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் ஸ்வரா பாஸ்கரும் பஹத் அகமதும் கலந்து கொண்டனர். அதில் தான் இவர்களுக்கு இடையே அறிமுகம் ஏற்பட்டது.

அந்த அறிமுகம் பின்னர் காதலாக மாற தற்போது திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், தற்போது நடிகை ஸ்வரா பாஸ்கர் தங்களது முதல் இரவு அறையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த அறையை தனது தாயார் தான் அலங்கரித்ததாகவும் ஸ்வரா பாஸ்கர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். நடிகை ஸ்வரா பாஸ்கரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இதையெல்லாமா பதிவிடுவார்கள் என அவரை திட்டி வருகின்றனர்.

மேலும், சிலரோ இவர் விளம்பரத்திற்காக தான் இதை எல்லாம் செய்கிறார் என்று விமர்சித்து வருகிறார்கள் மேலும் இந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கும் பரா பாஸ்கர் தன்னுடைய முதல் இரவு அறையை தன்னுடைய அம்மா தான் அலங்கரித்தார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்,

Tamil Behind Talkies AMP · Quick view
View full