பிரபல நடிகை டாப்ஸி பண்ணு எதிரே வந்தும் கடமை தவறாத ஸ்விக்கி ஊழியரின் வீடியோ தான் இப்போது வைரலாகியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார் டாப்ஸி பண்ணு. இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். சினிமா துறையில் நுழையும் முன் இவர் மாடலிங் நிபுணராக பணியாற்றினார். அதன் பிறகு இவர் 2010ல் ‘சும்மாண்டி நாதம்’ என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.

மேலும், இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நடிகை டாப்சி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் நடிக்க சென்றார்.

Advertisement

பாலிவுட்டில் டாப்ஸி:

பின் இவர் பாலிவுட்டிலேயே அதிக கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது டாப்சி அவர்கள் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் லீட் நடிகையாக வலம் வர முடியவில்லை என்றாலும், இந்தியில் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் அவரை கவனிக்க வைத்தன. இதையடுத்து இவர் பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே நடிகை டாப்ஸி அவர்கள் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மும்பையில் சலூனுக்கு போன டாப்ஸி:

இதற்கிடையில் நடிகர், நடிகைகள் என்றால் வாயடைத்து நிற்பவர்களுக்கு மத்தியில், தனக்கு கடமை தான் முக்கியம் என்று நடிகை டாப்ஸி எதிரே வந்தும் கண்டு கொள்ளாமல் தனது பணியை செய்த ஸ்விக்கி ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், நடிகை டாப்ஸி பண்ணு சலூன் ஒன்றுக்கு சென்று விட்டு வெளியே வரும் போது அவரிடம் பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என பலரும் அவரை அழைத்துக் கொண்டிருந்தனர்.

Advertisement

டாப்ஸியை கண்டு கொள்ளாமல் போன ஸ்விக்கி ஊழியர்:

அப்போது அங்கு வந்த ஸ்விகி ஊழியர் ஒருவர் உணவு டெலிவரி செய்வதற்காக உள்ளே
செல்லும்போது ,நடிகை டாப்ஸி ஸ்டைலிஷாக எதிரே வந்தாராம். ஆனாலும் ஸ்விக்கி ஊழியர் அவரைக் கண்டு கொள்ளாமல் தனது கடமையை செய்திருக்கும் வீடியோ தான் இப்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement

ஸ்விக்கி ஊழியரை பாராட்டும் நெட்டிசன்கள்:

அதேபோல் வைரலான வீடியோவை கண்டு, ஸ்விக்கி ஊழியருக்கு, ‘பாரத ரத்னா விருது’ வழங்க வேண்டும் என பலர் பாராட்டி வருகின்றனர். மேலும் புகைப்பட கலைஞர் ஒருவர் ஸ்விக்கி பார்ட்னரை டேக் செய்து, “ஹே ஸ்விக்கி, இந்த டெலிவரி பார்ட்னர் தனது அர்ப்பணிப்புக்கு ஊக்கத்தொகைக்கு தகுதியானவர்” எனக் குறிப்பிட, “தொந்தரவு இல்லை, நெஞ்சில் ஈரம், மகிழ்ச்சி. என் பாதை. கவனம் செலுத்துகிறது. செழிக்கிறது” என்று பதில் அளித்திருந்தது.

Advertisement