டாணாக்காரன் நடிகையா இது? சோசியல் மீடியாவில் வைரலாகும் அஞ்சலி நாயர் புகைப்படங்கள்.

By Manikandan · 17/6/2023

தமிழ் சினிமாவில் தமிழ் நாட்டில் இருந்து பெரிய கதாயனாகிகளாக வளர்ந்தவர்களை விட வெளிமாநிலத்தில் இருந்து வந்து பிரபலமானவர்கள் மிக அதிகம். குறிப்பாக நயன்தாரா தொடங்கி மாளவிகா மோகன் வரையில் வெளிமாநிலங்கள் இருந்து வந்தவர்கள் தான் அதிகம். அந்த பட்டியலில் மற்றொரு வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் நடிகை அஞ்சலி நாயர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த நெடியநல்வாடை என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இந்த படத்த்தில் கதாநாயகியான அஞ்சலி நாயர் காதலனை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கணவத்தையும் ஈர்த்தார் தொடர்ந்து இயக்குனர் தமிழ் இயக்கத்தில் வெளியான டாணாக்காரன் என்ற படத்திலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அஞ்சலி நாயர். இப்படத்தில் விக்ரம் பிரபு, எம் எஸ் பாஸ்கர், மதுசூதனன் ராவ், லால், லிவிங்ஸ்டன், போஸ் வெங்கட் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

கடந்த ஆண்டு 2022ல் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது . இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அஞ்சலி நாயர். இபபடத்தின் வெற்றியை தொடர்ந்து அஞ்சலி நாயருக்கு தொடர்ந்து பல வாய்ப்புகள் குவிய தொடங்கின. ஆனால் முதல் இரண்டு படங்களில் அடக்க ஒடுக்கமான கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு, காலங்களில் இவள் வசந்தம் என்ற ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அஞ்சலி நாயர் தமிழ் சினிமாவின் புதிதாக வில்லன் நடிகராக உருவாகியுள்ள விஜய் சேதுபதியுடன் இணைத்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின குறிப்பாக, தெலுங்க படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்த போது அதில் நடிக்க பெயரை மாற்றுக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் படத்தில் இருந்தே விலகி விட்டார்.

View this post on Instagram

A post shared by Anjali Nair (@ianjali.nair)

இப்படி சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் அஞ்சலி நாயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 லட்சத்திற்கும் மேலான நபர்கள் பின்தொடர்கின்றனர். மேலும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வவ்போது தன்னுடைய சில புகைப்படங்களையும் பதிவிடுவார். அப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full