இந்த வீடியோ எனக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது. மனமுறுகிய டாப்ஸி.

By subhashini · 4/2/2020

தற்போது இருக்கும் காலகட்டங்களில் ஒன்னும் இல்லாத விஷயத்திற்கெல்லாம் கணவன்- மனைவி இருவரும் சண்டை போட்டு பிரிந்து விடுகிறார்கள். ஆம்பளை என்றால் இப்படித்தான் இருக்கணும், பொம்பளை என்றால் இப்படித் தான் அடங்கிப் போகனும் என்று ஒரு கோட்பாட்டுடன் வாழ்கின்ற கும்பலும் உள்ளார்கள். திருமணம் முடிந்தால் போதும் புருஷன் அடிக்கிறது எல்லாம் ஒரு பிரச்சனையா என்று அதை உதாசீனப்படுத்தி செல்லுகிற கூட்டம் தான் அதிகம் உள்ளது. திருமணம் முடிந்த பிறகு ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு சென்று விட்டால் அவள் கண்ணை கசக்கி வந்தால் போதும் அவளுக்கு புத்திமதி சொல்வார்களே தவிர என்ன பிரச்சனை? என்ன நடந்தது? என்று யாரும் கேட்க மாட்டார்கள்.

https://twitter.com/rudrani_rudz/status/1223845993143132161

அந்த பெண் பொருளாதாரத்துக்கு கணவனையும், குடும்பத்தினரையும் நாடி நிற்கின்ற காரணத்தால் அந்த பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்ய நினைக்கிறார்கள். ஆனால், தற்போது உள்ள காலத்தில் பெண்கள் தங்களுடைய சொந்த காலில் நிற்க தொடங்கிய பின்னரும் இப்படி அடிமை வாழ்க்கை வாழ்வது அவசியமில்லை என்பது தான் நவீன பெண்களின் கருத்து. இந்நிலையில் பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கும் நடிகை டாப்ஸி நடித்த "தப்பட்" படத்தின் ட்ரைலர் ஜனவரி 30 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் ஆகி இருந்தது.

இந்த படம் திருமண வாழ்க்கையினால் ஆண், பெண்ணை நடத்தும் விதம், அந்த பெண்ணின் மனநிலை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தில் கணவன் பல பேர் மத்தியில் தன்னுடைய மனைவியை அறையும் காட்சி பார்க்கும் மக்களை பதற வைத்துள்ளது. இந்நிலையில் நடிகை டாப்சி அவர்கள் இந்த படத்தின் டிரெய்லரை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த படத்தின் டிரைலரை பார்த்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி என பல நடிகைகள் டாப்ஸிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

https://twitter.com/taapsee/status/1223846977357500417

அது மட்டுமில்லாமல் சாதாரண பெண்களும் டாப்ஸிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு அவர்களுடைய வாழ்கையில் இது மாதிரி நிகழ்ந்த சம்பவம் குறித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த பெண்களின் பதிவுக்கு நடிகை டாப்சியும் பதிலளித்து வருகிறார். இதில் ஒரு பெண் கூறியிருப்பது, மூன்று குழந்தைகளுக்கு தாயான என் உதவியாளர் அவரின் கணவன் கொடுமைகளை அனுபவித்து அனுபவித்து. பல சமயங்களில் அவளுக்கு நான் உதவி செய்தும், அவர் கணவர் மீது புகார் அளித்தும் உள்ளேன். அதற்குப் பின்னும் என் உதவியாளர் மறுபடியும் அவர் கணவன் கொடுமைகளைச் செய்து வந்தான். அதையும் அவர் சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார் என்று கூறி தன் உதவியாளரின் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு டாப்ஸி அவர்கள் கூறியது, இந்த வீடியோ என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த உலகில் இன்னும் எத்தனை பேர் இப்படி தினம் தினம் கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ்கிறார்களோ? இது போன்ற வாழ்க்கை வாழ்வதும் ஒன்றும் கட்டாயம் கிடையாது. இனியும் பெண்கள் இப்படி அமைதியாக சகித்துக் கொண்டிருக்காமல் அந்தப் பெண் ஏதாவது செய்வார் என்று நான் நம்புகிறேன் என்று பதில் போட்டிருந்தார். இப்படி பல பெண்கள் போட்டிருக்கும் பதிவிற்க்கு நடிகை டாப்சி 'IT IS NOT OK' எனும் வார்த்தையை அழுத்தமாக பதிவு செய்து இருந்தது.

behindtalkies AMP · Quick view
View full