கோலாகலமாக நடந்த மகா சிவராத்திரி விழா : மனமுருகி வேண்டி நடனமாடிய பிரபலங்கள் - வைரலாகும் வீடியோ
இந்தியா முழுவதும் வருடம் வருடம் மஹா சிவாரத்திரி கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. இந்த விழாவை சிவ பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த சிவராத்திரியில் இரவு முழுவதும் கோயில்களிலோ அல்லது வீடுகளிலோ தூங்காமல் கண் முழித்து சிவபெருமானை சிவ பக்தர்கள் வழிபடுவார்கள். அதுமட்டுமில்லாமல் கோவில்களில் சிவராத்திரி அன்று நடை சாத்தாமல் பூஜைகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
https://www.youtube.com/watch?v=cTaTc_07TIE
அந்த வகையில் வெள்ளியங்கிரியில் உள்ள ஈசா யோகா மையம் சிவராத்திரிக்கு பெயர் போனது. கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் தலைமையில் ஈஷா யோகா மையம் துவங்கப்பட்ட நாளில் இருந்தே ஆண்டு தோறும் இங்கு சிவ ராத்திரி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல சிவராத்திரி பூஜை என்ற பெயரில் இங்கே நடக்கும் நிகழ்ச்சிகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.
ஈஷா யோகா மையம்:
சற்குரு தலைமையில் சிறப்பு தியான நிகழ்ச்சி எல்லாம் நடைபெறும். இந்த விழாவிற்கு சிவ பக்தர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விஐபிகள், விவிஐபிகள், பொதுமக்கள் என பல பேர் கலந்து கொள்வார்கள். அதிலும், சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகள் சத்குருவின் பக்கதர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த 2026 ஆம் ஆண்டும் ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
#Tamannaah dance in isha
— Balaji (@_balajihere) February 16, 2026
pic.twitter.com/ulMrBWMsVE
அதோடு இந்த சிவராத்திரி விழாவில் இசை கச்சேரி நடத்தப்படும். மேலும், இந்த விழாவில் இந்தியாவில் சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் ஆகியோர் பங்கு பெற்றிருக்கிறார்கள். பின் ஆதியோகி சிலை முன்புறம் சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள் எல்லாம் நடைபெற்றது.
Sara Arjun & Srinidhi Shetty💃💃#IshaFoundation
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 16, 2026
pic.twitter.com/biymhavSBC
இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் இந்த விழாவில் தமன்னா, சாரா அர்ஜுன், ஸ்ரீநிதி செட்டி உட்பட பல நடிகைகள் கலந்து கொண்டிருந்தார்கள். பக்தர்களுடன் இவர்கள் மூவருமே சேர்ந்து நடனமாடியிருந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமன்னா வருடம் வருடம் இந்த சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்வது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.