முத்தக் காட்சிகளுக்கு நடிக்க மறுத்த நடிகை தமன்னா, லிப் கிஸ் சீனுக்கு ஓகேயா? அதிருப்தியில் ரசிகர்கள்

By subhashini · 17/8/2025

முத்த காட்சி பற்றி நடிகை தமன்னா சொல்லி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணன் நடித்த கேடி ஆண்டு மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சியமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் ஹிந்தி படங்களில் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். இடைப்பட்ட காலங்களில் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்தது. பின் பிரபாஸின் பாகுபலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னா பிசியாக படங்களில் நடித்துப் வருகிறார்.

தமன்னா திரைப்பயணம்:

அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த ‘அரண்மனை 4’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது. அரண்மனை 4 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை தமன்னா ஹிந்தியில் வேதா, ஸ்ட்ரீ 2 மற்றும் தெலுங்கில் ஓடெலா 2 போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதோடு சமீப காலமாகவே தமன்னா அவர்கள் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி வருகிறார்.

தமன்னா குறித்த தகவல்:

அந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது தமன்னா அவர்கள் ரைட் 2, ஸ்த்ரீ 2 போன்ற படங்களில் எல்லாம் பாடல்களில் மட்டும் நடித்து இருக்கிறார். அதோடு தமன்னா அவர்கள் திரையுரையில் நுழைந்த ஆரம்பத்தில் முத்த காட்சிகள், நெருக்கமான காட்சிகளில் நடிக்கவில்லை. லிப் கிஸ், காதல் காட்சிகள் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் விதியை போட்டு இருக்கிறார். பல ஆண்டுகளாக இவர் விதிக்கு உட்பட்டு தான் நடித்து வந்திருக்கிறார்.

தமன்னா பேட்டி:

அதனாலே இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் தன்னுடைய விதியை மீறி நெருக்கமான காட்சிகள் எல்லாம் நடித்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் தமன்னா, சினிமா உலகில் நுழைந்து ஆரம்பத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்தாலும் முத்தக் காட்சிகள் நடிக்க கூடாது என்று நினைத்தேன். இதனால் சவாலான பல கதாபாத்திரங்கள் நான் இழந்து இருக்கிறேன்.

முத்த காட்சி பற்றி சொன்னது:

முத்த காட்சிகளுக்கு சரி என்று சொல்லி இருந்தால் அப்போதே நல்ல படங்களில் எல்லாம் நடித்திருப்பேன். சவாலான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முத்த காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று நானே விதியை போட்டுக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார். இதற்கிடையில் தமன்னா அவர்கள் விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியானது. கடந்த 2023 ஆம் ஆண்டு தமன்னா- விஜய் வருமா இணைந்து நடித்த வெப் தொடர் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்-2’. இதன் மூலம் தான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் இருவரும் சில வருடங்களாக டேட்டிங் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் தான் இவர்கள் இருவருமே பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

behindtalkies AMP · Quick view
View full