சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து சென்று கொண்டு இருக்கும் சமயத்தில் 'சுறா' படம் குறித்து தமன்னா சொன்ன கருத்து - மீண்டும் விஜயை கேலி செய்யும் ரஜினி ரசிகர்கள்.

By Arun · 31/7/2023

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் யார் என்ற மிகப்பெரிய ஒரு பஞ்சாயத்து சென்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் இந்த விவாதமானது விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் தான் அதிகம் நிலவி வருகிறது. இப்படி ஒரு நிலைகள் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசிய பருந்து காக்கா குட்டி கதை விஜய் ரசிகர்களை பெறும் கோவத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த விழாவில் பேசிய ரஜினி 'காட்டில் பெரிய மிருகங்கள் எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை செய்து கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, காகம் எப்பவும் கழுகை சீண்டிக்கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்பவும் அமைதியாக தான் இருக்கும். கழுகு பறக்கும் போது தான் அதை பார்த்து காக்கவும் உயரமா பறக்க நினைக்கும். ஆனால், காக்காவால் அது முடியாது.கழுகு தன்னுடைய இறக்கையை கூட்டி ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்துக்கு பறந்து போய்விடும்' என்று பேசி இருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சு விஜய்யை தான் குறிக்கிறது என்று ரஜினி ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில் விஜய்யை கேலி செய்யும் விதமாக பல பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயிலர் பட நாயகி தமன்னா விஜய்யின் சுறா படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறது. அந்த பேட்டியில் நடிகை தமன்னாவிடம் 'என்ன இவ்வளவு சுமாராக நடித்திருக்கிறேன் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாமே இந்த படத்தையே நான் பார்க்க மாட்டேன் என்று நீங்கள் நினைக்கும் படம் எது' என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தமன்னா 'நிறைய படம் இருக்கிறது ஆனால் சுறா படத்தை சொல்லுவேன் எனக்கு பிடிக்கும் ஆனாலும் அந்த படத்தில் நான் மிகவும் மோசமாக நடித்திருந்தேன். ஓம் கடல் மாதா, கடல் மம்மி போன்ரெல்லாம் நான் மீண்டும் நடிக்கவே மாட்டேன் அந்த படம் சூட்டிங் செய்தபோது எனக்கு அந்த படத்தின் ரிசல்ட் தெரிந்துவிட்டது. ஆனால், கோலிவுட்டின் ஒரு மிகப்பெரிய ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த படத்தின் மூலமாகத்தான்.

அந்த படத்திற்கு பின்னால் தான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது என்றுமே நான் விஜய் சாருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்என்ன இவ்வளவு சுமாராக நடித்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் பலரும் பகிர்ந்து விஜய்யை கேலி செய்து வருகின்றனர்.பொதுவாக ஒரு நடிகருக்கு 25வது மற்றும் 50வது படம் மிக முக்கியமான ஒரு படமாக பார்க்கப்படும்.

ஆனால் விஜய்க்கு அந்த இரண்டு படங்களுமே சரியான வெற்றியை அமைத்துக் கொடுக்க முடியவில்லை. விஜயின் 25வது படமான கண்ணுக்குள் நிலவு திரைப்படம் ஓரளவுக்கு சுமாரான வரவேற்பு பெற்று இருந்தது அதேபோல விஜயன் ஐம்பதாவது திரைப்படமான சுறா திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவியதோடு மட்டுமல்லாமல் இன்று வரை விஜய் கேலிக்கு உள்ளாகும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full